• Apr 16 2026

விக்னேஷ் ராஜா – தனுஷ் கூட்டணி ஹிட்டா ஆகுமா.? பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி எப்போது தெரியுமா.?

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

விக்னேஷ் ராஜா தமிழ் சினிமாவில் போர் தொழில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே வலுவான கதை சொல்லும் திறன் மற்றும் திரைக்கதை அமைப்பின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்தார். அந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த படத்தை பார்த்து கவரப்பட்ட தனுஷ், விக்னேஷ் ராஜாவை நேரடியாக தொடர்பு கொண்டு தன்னுக்காக ஒரு கதை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பலனாக ‘கர’ என்ற புதிய படம் உருவாகியுள்ளது. இந்த படம் எதிர்வரும் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் மமிதா பைஜூ, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் புதிய முகங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் விக்னேஷ் ராஜா பல்வேறு பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இந்த படம் உருவான பின்னணி குறித்து விரிவாக பகிர்ந்து வருகிறார். 

குறிப்பாக, கதையின் மையமாக இருக்கும் சமூக பிரச்சினைகள், காடுகள் அழிவு மற்றும் அதன் தாக்கம் போன்ற அம்சங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதற்கிடையில், இந்த படத்தின் முதல் விமர்சனத்தை தனுஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். “விக்னேஷ் ராஜா, you are a genius! Thank you!” என்று அவர் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘கர’ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement