• Dec 25 2024

மணிமேகலை அடாவடி பொண்ணு! பிரியங்கா அழுதாங்க! வனிதா அதிரடி...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜே மணிமேகலை 5வது சீசனில் தொகுப்பாளராக பணியாற்றும் போது தனது வேலையை செய்ய விடாமல் போட்டியாளராக இருந்த ஒரு தொகுப்பாளர் கெடுப்பதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் அதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.


சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், அனைவருக்குமே சுய மரியாதை ரொம்ப முக்கியம்.மணிமேகலை தைரியமான பொண்ணு, யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டா அவ அடாவடி கேரக்டர்.  மணிமேகலைக்கு நான் சொல்வது, மணி நீ வளர்ந்து வர பொண்ணு, உன்னுடைய லைஃப் நல்லா இருக்கிறது என்பதற்காக இன்னொருவர் லைப் டேமேஜ் செய்யப்படுவதை நீ ஊக்குவிக்காதே, சொம்பெல்லாம் தூக்கி எறிவதெல்லாம் பார்ப்பதற்கு நல்லா இல்லை.


பிரியங்கா பேசுவதிலும் பழகுவதிலும் நல்ல பொண்ணு, நம்ம திட்டினா கூட வாங்கிக்கிற ஒரு கேரக்டர் அவ. பிரியங்கா என்னிடம் பேசினார், அவர் நாட்டிலேயே இல்லை. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம், அவர் முன்கூட்டியே பிளான் செய்து வெளிநாடு சென்றிருக்கிறார். அவரிடம் பேசும்போது ரொம்ப அழுதாங்க, ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு பெண்ணுக்கு பெண்ணோட வலி தெரியவில்லை என்றால் அவர் பெண்ணே இருந்து பிரயோஜனமே கிடையாது என கூறியுள்ளார் வனிதா.  




Advertisement

Advertisement