• Dec 29 2024

மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி? 7 கோடி ரூபா அபேஸ்..!! பரபரப்பு புகார்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் அத்தனையும் படு தோல்வியை சந்தித்த நிலையில், இதுதான் படம் என கிட்டத்தட்ட 175 கோடியை தாண்டி வசூலிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.

இந்த படம் வெளியான போது அதில் இடம் பெற்ற குணா பட பாடல் மீண்டும் வைரலானது. இதை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அந்த படம் எடுக்கப்பட்ட குகையை பார்ப்பதற்காக குணா குகையை நோக்கி படையாய் திரண்டு சென்றார்கள். 

இதனால் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் புகழின் உச்சிக்கே சென்றார்கள். இவர்களை கமலஹாசனும் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே, படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டதாக ஹமீதுவிடம் பணம் பெற்று, 18.65 கோடி செலவான நிலையில், 22 கோடி செலவானதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு மஞ்சுமெல் பாய்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்த போதிலும் தொடர்ச்சியாக சிக்கல்களில் சிக்கி வருகின்றது. அண்மையில் தான் இளையராஜாவின் இசையை பயன்படுத்தியதாக மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு நெருக்கடி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement