• Dec 26 2024

மீனாவின் சாட்டையடியில் துடிதுடித்த மனோஜ், ரோகிணி! கோமாவில் விஜயா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் மீனாவை அதிகாரமாக பேசிக் கொண்டிருக்க கோவத்தில் மீனா பெல்ட் எடுத்து மனோஜ் விஜயாவை அடிப்பது போல நினைக்கின்றார். மேலும் அந்த நேரத்தில் ரோகிணியும் அங்கு வர அவரையும் அடித்து அடிபணிய வைப்பது போல் நினைக்கின்றார். இதை எல்லாம் பார்த்து விஜயா ஷாக் ஆகி இருக்கின்றார்.

இப்படி மீனா கனவு கண்டு அதை நினைத்து சிரிக்கும் போது விஜயா எதற்காக சிரிக்கின்றாய் என்று கேட்கிறார். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லாமல் மனோஜையும் விஜயாவையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கின்றார். அந்த நேரத்தில் ரோகிணி வர அவரையும் பார்த்து சிரிக்கின்றார். என்ன விஷயம் என்று கேட்க, அது ரகசியமாகவே இருக்கட்டும் என்று சொல்லிச் செல்கின்றார்.

முத்து வீட்டிற்கு வந்ததும் மீனா தம்மை பார்த்து நக்கலாக சிரிப்பதாகவும் என்ன விஷயம் என்று கேட்டு சொல்லு என கேட்கின்றார் விஜயா. முத்து என்ன என்று கேட்கவும் மீனா காதுக்குள் ரகசியமாக சொல்கின்றார். இதைக்கேட்டு முத்துவும்  விழுந்து விழுந்து சிரிக்கின்றார். இவ்வாறு இருவரும் சிரித்துக் கொண்டிருக்க விஜயா கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். 


அதன் பின்பு அங்கு அண்ணாமலை வரவும் அவரிடம் சொல்லி காரணத்தை கேட்க, உனக்கு மீனா அழுதா தான் சந்தோசம் அவங்க சிரிக்கட்டுமே என்று அவர் செல்கின்றார். இதனால் முத்துவும் மீனாவும் எதற்காக சிரிக்கின்றார்கள் என தெரியாமல் மூவரும் குழம்பி போய் உள்ளார்கள்.

மறுபக்கம் ரவி ஸ்ருதியை அழைப்பதற்காக வாசுதேவன் வீட்டுக்கு செல்லுகின்றார். அங்கு அவர்கள் எப்படியாவது ஸ்ருதியை தம்முடனே வைத்திருக்க வேண்டும் இவர்களை பிரிக்க வேண்டும் என பிளான் போடுகின்றார்கள். ஆனால் ரவி ஸ்ருதியை  சமாதானப்படுத்தி அவருக்கு டைமண்ட் ரிங் கொடுத்து வீட்டிற்கு கூட்டி வருகின்றார்.

இன்னொரு பக்கம் முத்து ஃபோனில் இருந்து வீடியோவை எடுப்பதற்காக அவருக்கும் மீனாவுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கப் போவதாக ரோகினி வித்யாவிடம் சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement