• Dec 25 2024

பாக்கியாவின் கழுத்தை நெறிக்கும் புது பிரச்சினை..? கையெடுத்து கும்பிட்டு அழுத ஈஸ்வரி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு மூன்று நாட்களுக்கு சீல் வைக்கின்றார்கள். இதனால் சாப்பாடு எல்லாவற்றையும் வெளியே எடுத்து விட்டு மூன்று நாள் கழித்து எல்லாவற்றையும் துப்புரவு செய்துவிட்டு போகுமாறு சொல்லுகின்றார்கள். இதைக் கேட்டு பாக்கியா கண்கலங்கி நிற்கின்றார். 

இதை தொடர்ந்து சமைத்த சாப்பாடுகளை எல்லாம் எடுத்து பார்த்து நல்லா தானே இருக்கு நான் வேண்டுமென்றால் சாப்பிட்டு பார்க்கின்றேன் என்று பாக்கியா முயல, எழில் அவரை தடுத்து நிறுத்துகின்றார். அதன் பின்பு சாப்பாடு எல்லாவற்றையும் ஒரு வண்டி பிடித்து ஏற்றி அனுப்பி விடுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் பாக்கியா நியூஸில் பேசுவதை பார்த்து கோபி சிரித்து மகிழ்கின்றார். ஆனாலும் மூன்று நாள் தான் சீல் வைத்திருக்கின்றார்களா? என கோபத்தில் கத்த, அங்கே இருந்த ராதிகா என்ன நடந்தது என்று கேட்கின்றார். உனக்கு விஷயமே தெரியாதா என்று நடந்தவற்றை சொல்லுகின்றார்.


அதற்கு உடனே ராதிகா பாக்கியா அப்படி பண்ணுறவ இல்லை இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதும் சம்பந்தம் இருக்குதா என்று கேட்கின்றார். ஆனால் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கின்றார். அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா, கோபியை தூண்டிவிடு அப்படி என்று ராதிகாவுக்கு சொல்லுகின்றார். ஆனால் ராதிகா நீ பேசாம இரு என்று அவருக்கு திட்டி விட்டு செல்லுகின்றார்.

இறுதியாக வீட்டிற்கு பாக்கியா வர ஈஸ்வரி அவரின் கைகளை பிடித்து அழுகின்றார். என்னால்தான் இப்படி நடந்தது என்று. ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்று ஈஸ்வரிக்கு சமாதானம் சொல்லுகின்றார் பாக்கியா. அதன் பின்பு எடுத்த ஆர்டர்கள் 11 லட்சம் மீதமுள்ளது மூன்று லட்சம் இன்னும் 8 லட்சம் வேண்டும் என்று கணக்கு போட்டு பார்க்கின்றார்கள். இதனால் காசுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டுள்ளார் பாக்யா.


Advertisement

Advertisement