• Dec 25 2024

தம்பிகளை வைத்து ஸ்கெச் போடும் மனோஜ்! அதிர்ச்சியில் முத்து-ரவி...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம். சீத்தாவிடம் வேலைக்கு இப்பவே லீவு சொல்லிறு என்று மீனாவின் அம்மா சொல்கிறார். சீத்தா அம்மாவுடன் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கிறார்.


அப்போது அங்கு வந்த மீனா சீத்தாவிற்கு பார்த்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். சீத்தவிடம் நேருல பேசணும் என்று சொல்கிறார் என்று சொல்ல சீத்தாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருப்பது போன்று தெரியவில்லை. 


மனோஜ் வீட்டில் எல்லோரையும் வரவழைத்து ஒரு விஷயம் சொல்ல போகிறேன் என்னன்னு கண்டு புடிங்க என்று சொல்கிறார். எல்லோரும் நீண்ட நேரமாக ஒரு ஒரு விடையம் சொல்கிறார்கள் பின்னர் முத்து உங்க கல்யாண நாளா என்று கேட்கிறார்? அப்போது மனோஜ் ஆமா அணைக்கு எங்க கல்யாண நால பெருசா ஸ்டார் ஹோட்டல்ல கொண்டாட போறம், பெரிய தொழிலதிபர்கள் எல்லோரும் வருவாங்க என்று சொல்கிறார்.


அப்போது எல்லோரும் சரி என்று எழும்பி செல்கின்றனர். மனோஜ்-முத்து,ரவி இடம் தனியாக பேச அழைத்து செல்கிறார். ரோகிணி-மீனா,சுருதியிடம் தனியாக பேச அழைத்து செல்கிறார். மனோஜ் தொழிலதிபர் வீட்டில் எல்லோருடைய பேக்ரவுண்ட் பத்தி கேப்பாங்க ரவி சாதாரண ஹோட்டல்ல செ(f)ப் முத்து கார் ட்ரைவர்னு எப்படி சொல்லுறது என்று கேட்ட அவர்கள் கோபப்படுகிறார்.


அதற்கு மனோஜ் முத்து ட்ரேவல்ஸ் ஓனர் 50 கார் வச்சி இருக்கான், ரவி பெரிய ரெஸ்டாரென்ஸ் வச்சி நடத்திட்டு இருக்கான் என்று சொல்லி இருக்கேன் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு கொண்டாட்டத்துக்கு வாங்க அது போதும் என்று சொல்கிறார். முதலில் மறுத்த ரவி-முத்து பின்னர் ஒத்துக்கொள்கின்றனர்.    

Advertisement

Advertisement