• Dec 26 2024

முதன் முதலாக ரோகிணியை நம்ப மறுத்த மனோஜ்.. விஜயாவின் நரிபுத்தி அம்பலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைய எபிசோடில், ரோகிணி வீட்டுக்கு வரவும் மனோஜ் கோபமாக இருக்கின்றார். இதனால் ரோகிணி உனக்காக கருங்காலி மாலை வாங்க ஒரு சாமியாரை பார்க்கப் போனேன் என்று சொல்ல,  மனோஜ் நம்பவில்லை. நீ எதையோ என்னிடம் மறைக்கிறாய் என்று ரோகினியிடம் சொல்கின்றார்.

இதனால் ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்பி அந்த சாமியாரின் நம்பர் இருக்குது நீயே கேட்டு பாரு என வித்தியாவுக்கு போன் பண்ணுகிறார். ஆனாலும் மனோஜ் அதனை பார்க்காமல் போனை கட் பண்ணி விடுகின்றார். அத்துடன் வேறு ஒருவர் சொல்லித்தான் உன்னை நம்ப வேண்டும் இல்லை என்று சமாதானம் ஆகுகின்றார்.

இதை தொடர்ந்து மறுநாள் மனோஜ் அந்த மாலையை சாமியாரை  வைத்து பூஜை பண்ணி போட்டுக் கொள்கின்றார். இதைப் பார்த்த முத்து வழமை போல கிண்டல் பண்ணுகின்றார்.


அந்த நேரத்தில் அங்கு பாட்டி அனுப்பி வைத்ததாக பச்சைக் கடலை நான்கு மூட்டைகளில் வந்து இறங்குகின்றது. அதற்கு விஜயா உங்க அம்மா இந்த கடலையை வித்த காசு கொஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை என்று சொல்ல, அண்ணாமலை நீ அவங்களுக்கு எப்பையாவது காசு அனுப்பி இருக்கியா என்று திட்டுகின்றார்.

ஆனாலும் விஜயா அப்ப இதனை மல்லிகை கடைக்கு கொடுத்து காசாக்கி விடலாம் என்று சொல்ல, இல்லை தெரிந்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என்று சொல்லுகின்றார் அண்ணாமலை. முத்துவும் அதுதான் பாட்டியின் விருப்பமாக சொல்ல, எல்லாரும் தமக்கு கொஞ்சம் கொஞ்சம் வேண்டும் என்று சொல்கின்றார்.

இதன் போது மீனா தனக்கும் கொஞ்சம் தருமாறு கேட்கின்றார். எதற்கு என்று விஜயா கேட்க தான் கிருஸ்க்கு கொடுக்க வேண்டும் அவனுக்கு பிடிக்கும் என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார். 

முத்துவும் அவனை பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று அதனால் இன்னைக்கு போய்ட்டு வருவோம் என்று சொல்ல, ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement