• Dec 25 2024

"கோட்" டிக்கெட் கிடைக்கவில்லை! மனவேதனையில் புலம்பும் பிரபல கிரிக்கெட் வீரர்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

அடி சரவெடியென இன்று திரையரங்கங்கள் எல்லாமே தளபதி விஜய்யின் GOAT படத்தினை கொண்டாடி வருகின்றனர். இன்று ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே பெரிய அளவில் கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.


தளபதி ரசிகர்கள் விஜய் படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவேண்டும் என ஆசை எப்போதும் இருக்கும். ஆனால் அதற்கு டிக்கெட் கிடைப்பது தான் பெரிய சிக்கலாக இருக்கும்.  இந்நிலையில் பலரும் டிக்கெட் கிடைக்கவில்லை என்று வெக்ஸாகி இருப்பார்கள். 


இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி GOAT படம் பார்க்க ஆசைப்பட்டு முதல் காட்சி டிக்கெட் வாங்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என அவர் கூறி இருக்கிறார். டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், படக்குழுவுக்கு அவர் வாழ்த்து கூறி இருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.   


Advertisement

Advertisement