• Sep 06 2025

ராமமூர்த்தியின் இறுதிச்சடங்கில் நடந்த தகராறு.. கோபிக்கு விழுந்த மரண அடி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராமமூர்த்தியின் இறுதி சடங்குகளை செய்வதற்காக கோபியை வேட்டி கட்டி வருமாறு அயலவர்கள் சொல்லுகின்றார்கள்.

கோபியும் அதன்படியே ராமமூர்த்திக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு வேட்டி கட்டி கீழே வருகின்றார். அந்த நேரத்தில் இதுவரையில் அமைதியாக இருந்த ஈஸ்வரி ஒரு நிமிஷம் என்று சொல்லி, கோபி இவருக்கு எந்த சடங்குமே செய்யக்கூடாது என அதிர்ச்சி கொடுக்கின்றார்.

இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சியாக நிற்க, கோபி என்னுடைய அப்பாக்கு நான் தான் இறுதிச் சடங்கு செய்வேன் என்று சொல்லுகிறார். அங்கு இருந்தவர்களும் கோபித்தானே செய்ய வேண்டும் என சொல்லுகின்றார்கள். கமலாவும் கோபியை விட்டுக் கொடுக்காமல் பேசுகின்றார்.


ஆனாலும் ஈஸ்வரி நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்த போதும் இது எனது புருஷனின் இறுதி ஆசை அதை நிறைவேற்றுவது தான் எனது கடமை. கோபி எங்களுக்கு பிள்ளையே இல்ல. அவன் இவருக்கு எந்த சடங்கும் செய்யக் கூடாது என்று உறுதியாக சொல்லுகின்றார். எழில், செழியன் சொன்னபோதும் பாட்டி தனது முடிவில் இருந்து மாறவில்லை இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement