சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதியின் அம்மா ரோகினிக்கு போன் போட்டு நீங்க ஷோ ரூம் ஆரம்பித்தது உங்க மாமனாருடைய காசிலா? நான் நினைச்சேன் மலேசியாவில் இருந்து உங்க அப்பா அனுப்பியது என்று கிண்டலாக பேசுகின்றார்.
ரோகிணி இதைக்கேட்டு கோவத்தில் நீங்க ஏன் என்ட விஷயத்தில் தலையிடுறீங்க என்று கேட்க, நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான் என்று சொல்லுகின்றார். ஆனால் உங்களுக்கு பொண்ணு இருக்கு தானே.. அவங்கள மட்டும் பாருங்க.. இனி என்ட விஷயத்துல தலையிடாதீங்க என்று திட்டிவிட்டு ஃபோனை வைக்கின்றார்.
இதை தொடர்ந்து மீண்டும் போன் வர ஆமாங்க நான் தான் ஏமாத்தினேன்.. நான் ஒரு பிராடு.. அது எங்க அப்பாட பணம் இல்லை என்று போனில் யார் என்று பார்க்காமல் பேசுகின்றார். அதற்கு ரோகிணியின் அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுறா என்று கேட்க, பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னா.. ஆனால் ஒன்றும் சரியாகவில்லை என்று சொல்லுகின்றார்.
d_i_a
அதற்கு ரோகிணியின் அம்மா என்ன நடந்தாலும் அங்கேயே இருந்து சமாளி.. வீட்ட வராதே என்று சொல்ல, அதனையும் தப்பா எடுத்துவிட்டு ஃபோனை கட் பண்ணுகின்றார் ரோகிணி. அதன் பின்பு கிச்சனில் ஸ்ருதி மீனா இருக்க, அங்கு வந்த ரோகினி ஏன் வீட்டு விஷயத்தை எல்லாம் உங்க அம்மாவுக்கு சொல்லுகின்றீர்கள் என்று ஸ்ருதிக்கு பேசுகின்றார்.
அதற்கு நான் ரூமில் நடந்த விஷயத்தை சொல்லவில்லையே ஹோலில் நடந்த விஷயத்தை தான் சொன்னேன். அது பெரிய விஷயம் இல்லை என்று சொல்ல, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நீளுகின்றது. இதனால் மீனா அவர்களை தடுத்து அனுப்புகின்றார்.
இன்னொரு பக்கம் மனோஜ் கடையில் இருக்க, ரோகினி போன் பண்ணுகின்றார். இதனால் விஜயாவுக்கு போன் பண்ணி ரோகினி போன் பண்ணுவதாக சொல்ல, நீ இன்னைக்கு நைட்டுக்கு வர வேண்டாம்.. ஹோட்டல்ல சாப்பிடு.. அங்கே தங்கு என்று சொல்லுகின்றார். அதன்படியே ரோகினிடம் யாரையும் நம்ப முடியவில்லை நான் இன்னைக்கு நைட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லுகின்றார்.
இதன் போது விஜயா மனோஜ் நைட்டுக்கு வரமாட்டான் சாப்பாடு அவனுக்கு செய்ய வேண்டாம் என்று மீனாவிடம் சொல்ல, எனக்கு முதலே இவங்களுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்றால் விஜயா சொல்லித்தான் மனோஜ் இப்படி பண்ணுகின்றார் என்று ரோகிணி யோசிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!