• Dec 26 2024

பல பிரபலங்கள் ஒன்று திரண்ட பிரபலத்தின் திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஆமீர் கான் மகள் இரா கான் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.


பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்காக மும்பையில் நேற்று இரவு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளும்படி பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆமீர் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு கொடுத்திருந்தார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ வேர்ல்டு சென்டரில் இந்தத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர், ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன், பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி, ரேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர நடிகை கேத்ரீனா கைஃப், நடிகர் சூர்யா, நாக சைதன்யா, டாப்சி, மாதுரி தீட்ஷித், ஜாக்கி ஷெராப், அனில் கபூர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நடிகர் ஷாருக் கான் தன் மனைவி கெளரி கானுடன் கலந்து கொண்டார்.


திருமண வரவேற்புக்கு நடிகர் இம்ரான் கான் தன் காதலியுடன் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு 9 மாநில உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் குஜராத் மற்றும் மராத்தி உணவு பிரதானமாக இடம் பிடித்திருந்தது. திருமண வரவேற்புக்கு வந்தவர்களை ஆமீர்கான் தனிப்பட்ட முறையில் வரவேற்றார். விருந்துக்கு 2500 பேருக்கு ஆமீர் கான் அழைப்பு கொடுத்திருந்தார்.

திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ... 


Advertisement

Advertisement