• Oct 26 2024

2 கோடிக்கு கார், 40 கோடிக்கு வீடு.. 40 வயதான நடிகைக்கு அன்பளிப்பு கொடுத்த மாஸ் நடிகர்.. வீட்டில் புகைச்சல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


கிட்டத்தட்ட 40 வயதை எட்டிய ஒரு நடிகைக்கு மாஸ் நடிகர் ஒருவர் 2 கோடி ரூபாய்க்கு கார் மற்றும் 40 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி கொடுத்துள்ளதாகவும் இதனால் நடிகரின் வீட்டில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திரையுலகை பொருத்தவரை ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகை காதலிப்பது, அதன்பின் திருமணம் செய்து கொள்வது அல்லது திருமணம் செய்யாமல்  வாழ்க்கை நடத்துவது என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஒருவர் சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஒருவருக்கு அதிகம் செலவு செய்து வருவதாகவும் இதனால் அவருடைய வீட்டில் புகைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக 2 கோடி ரூபாய்க்கு நடிகைக்கு கார் வாங்கி கொடுத்த மாஸ் நடிகர், 40 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி கொடுத்துள்ளதாகவும் இன்னும் அதிகம் செலவு செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. கிட்டத்தட்ட 40 வயதை எட்டிய அந்த நடிகை, மாஸ் நடிகரால் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டு வருவதாகவும் அது மட்டுமின்றி அவரது கையில் சில படங்களும் இருப்பதால் அவரது காட்டில் மழை என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே மாஸ் நடிகரின் மனைவி அவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது அப்பா வீட்டில் தான் இருக்கும் நிலையில் தற்போது இந்த செய்தியையும் கேள்விப்பட்டு அவர் கடுப்பாகி உள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் இன்னொரு ஜோடி பிரியும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement