• Dec 27 2024

‘துருவ நட்சத்திரம்’ மெதுவா ரிலீஸ் ஆகட்டும்.. கௌதம் மேனன் ரிலீஸ் செய்யும் இன்னொரு திரைப்படம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு அதன் பின் திடீரென படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத நிலையில் ஏற்கனவே நீண்ட காலமாக கிடப்பில் இருந்த கௌதம் மேனனின் இன்னொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவாகிய 'ஜோஸ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு திரைக்கு வர தயாரானது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படம் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது இந்த படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த படத்தின் நாயகன் வருண் நெருங்கிய உறவினர் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. வருண், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார்.  எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.   

Advertisement

Advertisement