• Dec 26 2024

கூட இருப்பவர்களை ஸ்கெட்ச் போட்டு வெளியேற்றும் மாயா! இத கவனிச்சீங்களா மக்களே..? லீக்கான வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இறுதியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.

அதன்படி, வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைய, அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.


அதேபோல, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேறினார்.  

இந்த நிலையில், புல்லி கேங்கில் இருக்கும் ஒவ்வொருவரும் தான் தமக்குள் போட்டி போட்டு கூட்டாக உள்ளவர்களையே நாமினேஷன் செய்து வெளியேற்றுகின்றனர் என்பதை அர்ச்சனா தினேஷ்க்கு விளக்கம் செய்து கொண்டுள்ளார்.

அதன்படி, அடுத்தடுத்த வாரங்களில் நடந்த எலிமினேஷனை நோட் பண்ணி பார்த்த எல்லாமே அவங்க கேங் தான் என அர்ச்சனா சொல்லுகிறார். அதைப்போலவே, இறுதியாக, ஜோவிகா,அக்சயா, ஐஷு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, அடுத்த வாரத்திற்கு நிக்சனை வெளியேற்ற இப்பவே பிளான் போட்டு வருகிறார்கள் புல்லி கேங். எனவே பொறுத்து இருந்து பார்ப்போம்..



Advertisement

Advertisement