• Dec 25 2024

நானும் அர்ஜுன் சாரும் லக்கி... இதை எத்தனை பேர் நோட் பண்ணீங்க... விடாமுயற்சி பற்றி லியோ மேடையில் பேசிய திரிஷா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உட்பட பல பிரபலங்கள் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் லியோ படத்தின் வெற்றிவிழா கடந்த வாரம் நடைபெற்றது. நேற்று இந்த விழாவை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர்.


இந்த விழாவில் விஜய் பேசிய ஸ்பீச் மிகவும் வைரலானது. இந்நிலையில், விஜய்க்கு முன்னதாகவே நடிகை திரிஷா பேசினார். இதில் லியோ படக்குழு குறித்தும் லியோவின் வெற்றி குறித்தும் சுவாரஸ்யமாக பேசிய த்ரிஷா நடிகர் அர்ஜுன் குறித்து பேசினார்.


அதாவது நடிகர் அர்ஜுன் அடுத்ததாக அப்போதுவிடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அந்த தொடர்பாக நடிகை திரிஷா ' நானும் அர்ஜுன் சாரும் லக்கி. மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறோம். அதனுடைய அறிவிப்பு விரைவில் வெளிவரும்' என கூறியுள்ளார்.


ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி திரிஷா மற்றும் அர்ஜுன் இருவரும் இணைந்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது தான். இதை தான் நடிகை திரிஷா லியோ வெற்றி விழா மேடையில் கூறியுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது என பேசப்பட்டு வருகிறது. 


இந்த விஷயத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். நடிகர் விஜய்யுடன் பார்த்த திரிஷாவை அடுத்து நடிகர் அஜித்துடன் திரையில் பார்க்க தயாராக இருப்போம். 

Advertisement

Advertisement