ஏ. ஆர் ரகுமானின் விவாகரத்து பற்றிய செய்தி கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து ஏ.ஆர் ரகுமானின் இசைக்குழுவில் இருந்த பேஸ் கிட்டாரிஸ்ட்டாக இருந்த இசைக் கலைஞர் மோகினி என்பவரும் அடுத்த நாளில் தனது விவாகரத்தை அறிவித்த விஷயம் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது.
இதனால் பலரும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பல அவதூறு கருத்துக்களை பகிர்ந்தார்கள். இது ஏ. ஆர் ரகுமானை மட்டும் இல்லாமல் அவர்களுடைய குடும்பத்தையும் சீர்குலைய வைத்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் அண்மையில் இவர் ஆடு ஜீவிதம் படத்திற்காக ஹாலிவுட் மியூசிக் அண்ட் மீடியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் இந்த விருதைப் பெறும் முதல் இந்திய ஏ ஆர் ரகுமான் தான்
d_i_a
கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் ஒற்றுமையாக இருந்த ஏ. ஆர் ரகுமானின் குடும்பம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தாங்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூவருமே பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள். இவ்வாறான நிலையில் ஏ. ஆர் ரகுமானின் மனைவி தனது விவாகரத்தை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஏ. ஆர் ரகுமானின் விவகாரம் தொடர்பாக மோகினி தே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்த கருத்து தற்போது பலரையும் ஈர்த்துள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், என்னை நேர்காணல் எடுக்க கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியும். நான் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. என்னை பேட்டி எடுக்க முனைந்தவர்களிடம் முடியாது என்று கூறிவிட்டேன். வதந்திகளுக்கு பதில் அளித்துக் கொண்டு அதன் பின்னால் ஓட முடியாது. அதற்கான சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க நான் விரும்பவில்லை. எனது தனி உரிமையும் சுதந்தரத்தையும் மதிக்கவும்... எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.
Listen News!