• Dec 26 2024

முட்டாள்.. இடியட்.. அறிவிருக்கா.. கோபத்தில் திட்டிய மீனா.. குஷ்புவின் ரியாக்சன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை மீனா தனது சமூக வலைதளத்தில் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களை முட்டாள், இடியட், வன்மம் பிடித்தவர்கள் என்று பதிவு செய்து உள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு நடிகை குஷ்புவும் கமெண்ட் செய்துள்ளார்.  

நடிகை மீனாவின் கணவர்  கடந்த 2022ஆம் ஆண்டு காலமான நிலையில் சில வாரங்களிலேயே அவரது இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக கடந்த சில நாட்களாக பிரபல நடிகர் ஒருவருடன் இணைத்து மீனா குறித்த வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பலமுறை மீனா தான் இரண்டாம் திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று விளக்கம் அளித்த நிலையிலும் அவரைப் பற்றிய வதந்திகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வதந்திகள் எல்லை மீறி பிரபல நடிகருடன் இணைத்து மீனாவை பேசிக் கொண்டிருப்பதும், ஒரு பிரபல அரசியல்வாதியுடன் இணைத்து பேசி கொண்டிருப்பதையும் பார்த்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாகவே திட்டி ஒரு பதிவு செய்துள்ளார்.

வதந்திகளை உருவாக்குபவர்கள் வன்மம் பிடித்தவர்கள் என்றும், அதை பரப்புபவர்கள் முட்டாள்கள் என்றும், அந்த வதந்திகளை ஏற்றுக்கொள்பவர்கள் இடியட் என்றும் பதிவு செய்துள்ளார். மீனாவின் இந்த கோபமான பதிவுக்கு நடிகை குஷ்பு, ‘இந்த காலத்தில் பெண்கள் மிகவும் தைரியமிக்கவர்களாக இருக்க வேண்டிய நிலை இருக்கிறது, உங்களுக்கும் அந்த தைரியம் இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இது மீனாவின் ஒரிஜினல் சமூக வலைத்தள பதிவு இல்லை என்றும், அவரது பெயரில் உருவாக்கப்பட்ட போலியான கணக்கிலிருந்து பதிவாகியுள்ளது என்றும் ஆனால் அது தெரியாமல் குஷ்புவும் கமெண்ட் செய்து இருக்கிறார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
மீனா பதிவு செய்ததாக கூறப்படும் சமூக வலைத்தள கணக்கில் வெறும் 8400 ஃபாலோயர்கள் மட்டும் இருப்பதால் இது போலி கணக்காக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement