விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடிக்கின்றார்.
மதுரையை சேர்ந்த கோமதி பிரியா ஆரம்பத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து தான் இன்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆரம்பத்தில் படித்துக் கொண்டே மாடலிங் செய்துள்ளார்.
d_i_a
இதைத்தொடர்ந்து வாய்ப்பு தேடி பல இடங்களிலும் சென்றுள்ளார். பல ஆடிஷன்களில் இவரை நிராகரித்தும் உள்ளனர். ஆனால் அத்தனைக்கும் ஈடாக இன்று ஒரே ஒரு சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இவருடைய கேரக்டர் குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாகவும், கொடுமை செய்யும் மாமியாருக்கு நல்ல மகளாகவும், தனது சகோதரர்களை முன்னேற்றுவதில் அதிக அக்கறை கொண்ட ஒரு கேரக்டராகவும் காணப்படுகிறது. மேலும் அப்பாவி தனமான இவருடைய நடிப்பும் சுபாவமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், கோமதி பிரியா மொட்டை மாடியில் எடுத்துக்கொண்ட ஷுட்டிங் தற்போது வைரலாகியுள்ளது. அதில் அந்தரத்தில் இருந்து தியானிப்பது போல, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கோமதி பிரியா கொடுத்த போஸ் வைரலாகி வருகின்றது. இதோ குறித்த புகைப்படங்கள்,
Listen News!