நடிகர் சமுத்திரகனி நடிப்பில் நேற்று திரு. மாணிக்கம் திரைப்படத்தினை ப்ரோமோஷன் செய்யும் வகையில் கூல் சுரேஷ் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு திரு மணிக்கம் படத்தின் பெயரை சொல்லி நடுரோட்டில் நின்று சத்தமிடுகிறார். இந்த வீடியோ நேற்று வைரலான நிலையில் இதனை பார்த்து சமுத்திரக்கனி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திரு. மாணிக்கம். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தினை ப்ரோமோஷன் செய்யும் வகையில் தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டு "உண்மையாகவே இந்த சாட்டை அடி படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்" என்பதை திரு மாணிக்கத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நந்தா என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இன்று அந்த வீடியோவை பார்த்த சமுத்திரக்கனி "நீங்க எங்கங்க அங்க போனீங்க? என்று அதிர்ச்சியாக பார்க்கிறார். அதில் கூல் சுரேஷ் " சமுத்திர கனி உங்களுக்கு ஒரு கேள்வி ஏன் நீங்க திருட்டு மாணிக்கமா நடிக்க மாட்டிங்களா? என்று கேட்கிறார் அதற்கு சமுத்திரக்கனி "திருட்டு மாணிக்கமாக இருந்தவர் தான் திரு. மாணிக்கமா மாறி இருக்குறேன் என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!