• Dec 27 2024

விஜயாவுக்கு சரியான பதிலடி கொடுத்த மீனா! ஜால்ரா தட்டிய ரோகிணி! ஆசீர்வாதம் பண்ணிய அண்ணாமலை

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், தன்னுடன் மாலை கட்டிய பெண்களுக்கு மீனா காசு கொடுக்க அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். மேலும், நீங்க ரெண்டு பெரும் எங்களுக்கு பிள்ளைகள் போல என்று சொல்கிறார். குறித்த பெண்கள் இந்த காசை என்ன செய்ய போறா என கேட்க, அவருக்கு கார் வாங்கி கொடுக்க போறேன் என சொல்கிறார்.

மறுப்பக்கம் வீட்டுக்கு வந்த மீனாவும் முத்துவும் அண்ணாமலையிடம் காசை கொடுத்து விட்டு இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். 

இதையடுத்து, விஜயா ரோகிணியை அழைத்து நீ மட்டும் தான்மா வீட்டுல என்னை மதிக்கிறா. உழைச்ச காச கொண்டு வந்து கொடுக்கிறா என மீனாவுக்கு குத்தி கதைக்கிறார். இதைக்கேட்டு மீனா உள்ளே சென்று காசை எண்ண, ரோகிணி உங்களுக்கு தாரத்துக்கு தான் மீனா காசு எடுக்கிறா போல என ஏத்தி விடுகிறார்.


காசு தருவா என எதிர்பார்த்த விஜயாவிடம், நான் வெளிய போய்ட்டு வாரேன், அடுப்புல சாம்பார் இருக்கு அத இறக்கி வைங்க என சொல்லிவிட்டு செல்ல, இந்த பூக்காரிக்கு திமிர் அதிகம் என திட்டுகிறார். 

அதன்பின், கார் செட்டுக்கு சென்ற மீனா, செல்வத்தை அழைத்து முத்துவுக்கு கார் ஒன்று எடுக்கப் போவதாக கூற, முத்துவும்  செகனண்ட் கார் ஒன்று பார்த்தான். அது அவனுக்கு பிடிச்சது ஆனா காசு இல்ல என்று விட்டுட்டான் என சொல்ல, அந்த காரையே பார்ப்போம் என சொல்லி காரை பார்க்க போகிறார்கள்.

குறித்த கார் நல்ல கண்டிஷனில் இருப்பதாகவும், அதை நானே  எடுத்துக் கொள்வதாகவும் மீனா சொல்கிறார். அந்த கார் 3 லட்சம் முற்படமாக 80 ஆயிரம் கட்ட வேணும் என சொல்ல, தன்னிடம் பூ வித்த காசு 50,000 இருக்கு,  சேர்த்து வைத்த காசு பத்தாயிரம் இருக்குது, இன்னும் 20 ஆயிரம் வேண்டும் என மீனா யோசிக்கிறார். ஆனாலும் எப்படியும் காரை எடுத்து விடுவோம் என சொல்லிவிட்டு செல்கிறார்.

போகும் வழியில் சீதாவை சந்தித்து விஷயத்தை கூறுகிறார். இன்னும் இருபதாயிரம் வேணும் எங்கேயும் வட்டிக்கு எடுக்கலாமா எனக் கேட்க, தமது ஏரியாவில் ஒருவர் வட்டி கொடுப்பதாகவும் அவரிடம் தான் சொல்வதாகவும், அவர் வந்து கடையை பார்ப்பாரெனவும் சீதா சொல்லிவிட்டு செல்கிறார்.

இதை அடுத்து குறித்த நபர் விஜயா வீட்டிற்கு முன்னால் உள்ள மீனாவின் பூக்கடையை வந்து நோட்டமிட, மேலே இருந்து பார்த்த விஜயா, கீழே வந்து நீங்க யாரு எதுக்கு இப்படி பாக்குறீங்க என கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement