• Dec 25 2024

முத்துவின் நிலமையைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் மீனா- அண்ணாமலை கேட்ட கேள்வி-Siragadikka Aasai Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மீனா வீட்டிலிருந்து முத்துவும் மீனாவும் ஆட்டோவில் வருவதைப் பார்த்து அண்ணாமலை கார் எங்கே என்று கேட்கின்றார். அப்போது மீனா காரை வித்தாச்சு என்று சொல்ல வர முத்து காரை ஓனரோட பொண்ணு வாங்கிடுச்சு என்று சமாளிக்கின்றார்.

பின்னர் ரூமுக்குள் வந்து முத்து மீனாவிடம் கார் போன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல வேணாம் என்று இருக்கிறேன். நீ சொல்லிட்டு இருக்கிற இத்தனை வருஷமாக கார் ஓட்டிட்டு இருக்கிறேன். கண்டிப்பாக எனக்கு வேலை கிடைக்கும் என்கின்றார்.

தொடர்ந்து ஓர் இடத்திற்குச்சென்று கார் துடைக்கும் வேலையில் சேருகின்றார். இதைப் பார்த்து மீனா அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement