• Apr 23 2026

கருத்துக்கணிப்பில் மீனாவுக்கு கிடைத்த தோல்வி.. களத்தில் இறங்கிய முத்து.! டுடே எபிசோட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த விஜயா தனக்கு இடுப்பு வலிப்பதாக சொல்லி அழுது புலம்புகிறார். ஆனால் அதற்கான காரணத்தை அண்ணாமலை கேட்க, அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து, மீனாவின் போஸ்டரை ஒரு அம்மா கிழித்து எரிந்துள்ளார்.

இதன்போது மீனாவின் நண்பிகள் அவரைப் பிடித்து அடித்துத் துவைத்துள்ளனர். "கிட்டத்தட்ட அந்த அம்மாவுக்கும் எங்களுடைய அம்மாவின் வயதுதான் வரும்" என மறைமுகமாகச் சொல்கிறார். 

அதனை அண்ணாமலையும் விளங்கிக்கொண்டு, "நம்ம வீட்டுல ஒரு பொண்ணு முன்னேறி வந்தா தட்டிக்கொடு, இப்படியான கேவலமான வேலைகளை செய்யாதே, பிறகு இப்படித்தான் அடி வாங்குவாய்" என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.


இன்னொரு பக்கம், ஸ்ருதியும் ஸ்வேதாவும் இணைந்து தேர்தல் சம்பந்தமாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்துகின்றனர். அதில் மீனாவுக்கு குறைந்த அளவு ஓட்டும், சிந்தாமணிக்கு அதிக அளவு ஓட்டும் கிடைக்கின்றது. இதனால் மீனாவை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் ஆன்லைனில் பிரச்சாரம் செய்கின்றனர். 

அதேபோல முத்துவும் தன்னுடைய நண்பர்களுடன் வீதி வீதியாகப் போஸ்டர் ஒட்டி மீனாவுக்கு ஆதரவு சேர்க்கிறார். இறுதியில் மீனாவும் நேரடியாக களத்தில் இறங்கி, "தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வேன்" என பூ வியாபாரிகளுக்கு விளக்கமாகச் சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement