சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் அதிகாலை எழுந்து சாமிக்கு பூஜை பண்ணுகின்றார். இதனை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள். இதன்போது தாங்கள் இன்றைய தினம் பேலசுக்கு அட்வான்ஸ் காசு கொடுக்க உள்ளதாக மனோஜூம் ரோகிணியும் சொல்லுகின்றார்கள்.
அதன் பின்பு எல்லோரும் இரண்டு நாள் அந்த வீட்டில் வந்து தங்கி விட்டு போகும் படி மனோஜ் சொல்ல, ஸ்ருதியும் ரவியும் தங்களுக்கு வேலை இருக்குது அதனால் வர முடியாது என்று சொல்கின்றார்கள். ஆனால் முத்துவும் மீனாவும் அவர்களிடம் பேசி சம்மதிக்க வைக்கின்றார்.
d_i_a
இதை தொடர்ந்து மீனா கோவிலுக்கு சென்று அங்கு தனக்கு கிடைத்த முதல் சம்பளத்தை அம்மாவுக்கும் சீதாவுக்கும் சத்யாவுக்கும் கொடுக்கின்றார். இதன் போது ரோகிணி அங்கே வர, மீனாவும் மீனாவுடைய அம்மாவும் சென்று ஏன் எங்களுடைய கடையில் மாலை வாங்கி இருக்கலாம் தானே என்று சொல்ல, சாமிக்கு போடுற மாலை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று அவர்களுக்கு முகத்தில் அடித்தால் போல் பதில் சொல்லிவிட்டு செல்கின்றார்.
ரோகிணி செல்லும்போது அங்குள்ள குடம் தடுக்கி விழுகின்றது. இதனால் இது அபசகுணம் என்று மீனாவின் அம்மா சொல்லுகின்றார். இதனை மீனா ரோகிணியிடம் சொல்ல முற்பட மீனாவின் அம்மா தடுத்து விடுகின்றார். நீ இப்போது சொன்னால் பொறாமையில் சொல்வதாக நினைப்பார்கள். அதனால் அவர்கள் போன பின்பு அம்மனுக்கு தேங்காய் ஒன்றை உடைக்குமாறு சொல்லுகின்றார்.
அந்த நேரத்தில் பேலசை விற்பவர்கள் காசு வாங்க ரெடி ஆக, மீனா ரோகினியை கூப்பிட்டு இன்னொரு நாள் காசை குடுங்க, அபச குணமா இருக்கு என்று சொல்லுகின்றார்.
இதைக் கேட்ட மனோஜூம் தனக்கும் ஒரு மாதிரி தான் உள்ளது நாளைக்கு காசை கொடுப்பம் என்று சொல்ல, மீனா படிக்காதவர் அவர் அப்படித்தான் சொல்லுவார் என்று டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு காசை கொடுத்து விடுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!