• Dec 26 2024

நேற்று followers போட்ட போடுல மீனா பொண்ணு பயந்துடுச்சு.. முத்துவ பிடிச்சு வச்சு... நீங்களே பாருங்க..!!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக வலம் வருபவர் தான் கோமதி பிரியா.

இவரது தன்மையான முகபாவனையும் அப்பாவித்தனமும் நடிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்த சீரியலில் ஒரு நாள்  மீனா என்ற கேரக்டரை காணவில்லை என்றால் ரசிகர்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள். 

இந்த சீரியலில் தற்போது முத்துவும் மீனாவும், ஸ்ருதி ரவியிடம் மீண்டும் வீட்டுக்கு வருமாறு கதைக்கிறார்கள். 

இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் ஸ்ருதியை முத்து காப்பற்ற, தன் வீட்டுக்கு சென்ற ஸ்ருதி மீனாவை நீங்க தான் அசிங்கப்படுத்தினீங்க, அவங்க வீட்டுல எல்லாரும் என்ன நல்லா தான் பாக்கிறாங்க. நான் ரவி வீட்டுக்கே போறேன் என கிளம்புகிறார்.


இந்த நிலையில், சிறகடிக்க சீரியல் நாயகி கோமதி பிரியா நேற்றைய தினம் மலையாள சீரியலின் ரீல்ஸ் ஒன்றை போட்டு எதிர்ப்புகளை சம்பாதித்தார். தற்போது அதனை ஈடு செய்யும் விதத்தில் முத்துவை வைத்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


அதாவது, மலையாள சீரியலில் நடிக்கும் கோமதி அடிக்கடி ரீல்ஸ் போடுவது போலவே அந்த சீரியல் நடிகர்களுடன் ரீல்ஸ் செய்து வெளியிட, இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

இவரது ரசிகர்களும் முத்துவுடன் ரீல்ஸ் போடுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தற்போது முத்துவுடன் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement