• Dec 26 2024

பழைய கணக்கில் மனோஜ்க்கு கும்மாங்குத்து குத்திய மீனா! இந்த பொண்ணு தரலோக்கல் போலயே..!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக திகழ்பவர் தான் கோமதிப் பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவரது கேரக்டர் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அப்பாவித்தனமாக காணப்படுகிறது. மேலும் தனது சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஒரு கதாபாத்திரமாகவும் மீனா கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதிப் பிரியா, அந்த சீரியலில் நடிக்கும் ஸ்ரீதேவுடன்  ரீலிஸ் ஒன்றை செய்து வெளியிட்டு உள்ளார். ஆனால் அதில் அவர் மனோஜ்க்கு அடிப்பதை மட்டும் சோர்ட் பண்ணி வெளியிட்டுள்ளார்.


சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஸ்ரீதேவ். இவர் கனடா வேலைக்கு செல்ல வேண்டும் என சாமியார் சொன்ன பரிகாரத்தின்படி கடந்த எபிசோடில் கோயில் வாசலில் இருந்து பிச்சையும் எடுத்தார்.


தற்போது ரோகிணியுடன் இணைந்து தனது ஓடிப்போன காதலி எடுத்துச் சென்ற 27 லட்சத்தையும் மீட்பதற்காக ஜீவாவை தேடி வருகிறார். இன்றைய எபிசோட்டில் இவர் ஜீவாவை நெருங்கிய போதும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் ஜீவா இவரை பார்த்து விட்டு காரில் ஒளிந்துக்கொள்கின்றார். 

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம் இவர் எப்படி ஜீவாவை கண்டுபிடித்து பணத்தை மீட்கிறார் என்பதை. தற்போது பழைய கணக்கு எல்லாம் வைத்து மனோஜை அடித்த மீனாவின் வீடியோ இதோ, 


Advertisement

Advertisement