• May 28 2026

ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணி பேசும் மீனா.. சந்தோஷுக்கு கிடைத்த சாட்டையடி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜூம்  சந்தோஷும் ரோகிணிமிடமிருந்து எப்படியாவது விவாகரத்து வேண்டும் என்பதற்காக பிளான் பண்ணுகிறார்கள். ஆனால் இதில் சதி இருப்பதை அறிந்த ரோகிணி சந்தோஷை தனியாக வரவழைக்கின்றார்.

இதனால் குஷியில் சென்ற சந்தோஷுக்கு தர்ம அடி கொடுத்து அனுப்புகின்றார் ரோகிணி. மேலும் உன்னுடைய பாஸை வந்து காப்பாற்ற சொல்லு என்ன சொல்ல, மனோஜ் நடந்தவற்றை குடும்பத்தாரிடம் சொல்லுகின்றார். இதனால் முத்து வந்து சந்தோஷை காப்பாற்றுகின்றார்.

அதற்கு பின்பு இங்கு நடந்தவற்றை ஸ்ருதியிடமும்  மீனாவிடமும் சொல்லி சிரிக்கின்றார் முத்து. மேலும் இந்த விஷயத்தில் ரோகிணி  பண்ணியது சரிதான் என கூறுகின்றான்.


இதைத்தொடர்ந்து வீட்டில் மனோஜ் அமைதியாக இருக்க அவருக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கிறார் விஜயா. எனினும் அண்ணாமலை ரோகிணி விஷயத்தில் இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாக பண்ணிக்கிட்டு இருக்காத, அப்படி செய்தால் டிவோர்ஸ் கிடைச்சிடுமா, டிவோர்ஸ் கிடைக்காமல் போய்விடும் என எச்சரிக்கின்றார். 

இறுதியில் விஜயா மனோஜ்க்கு ஒரு பொண்ணு பார்த்து இருப்பதாக கூற, அந்த பொண்ணு யார் என கேட்டு குஷி ஆகின்றார் மனோஜ். இதுதான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement