• Dec 26 2024

பூமர் மாமியாருக்கு எதிராக சபதமெடுத்த மீனா! விஜயாவிடம் செருப்படி கேள்வி கேட்ட ஸ்ருதி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்..

அதில் விஜயா, மீனோட அப்பா உயிரோடு இருந்தா அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்குமோ தெரியாது. அவரோட உயிரைக் கொடுத்தது தான் மீனாக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. இதுல எங்க நகை போடப் போறாங்க என மீனாவை அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து பூஜை ரூமில் மீனா சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்க. அந்த இடத்தில் விஜயா வந்து வேலை சொல்லுகிறார். இதைத் கேட்ட மீனா கோபமாக, ஏன் நான் மட்டுமா இருக்கேன் மத்த ஆட்களும் இருக்காங்க தானே அவங்கள்டையும் போய் வேலையை சொல்லுங்கன்னு கோவமாக திட்டுகிறார். இதை தொடர்ந்து, விஜயாவும், மீனாவும் சத்தம் போட்டுக் கொண்டு இருக்க, அனைவரும் அந்த இடத்திற்கு வருகிறார்கள்..


அதில், ரோகிணி என்ன மீனா ஆன்ட்டி கிட்ட இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்க, நான் அவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் வேற யாரும் குறுக்க வராதீங்க என ரோகிணிக்கும் பதிலடி கொடுக்கிறார். 

இதன்போது, அண்ணாமலை, ஸ்ருதி, ரவி ஆகியோர் மீனாவுக்கு ஆதரவாக கதைக்க, ஸ்ருதியும் ஆமா நீங்க ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை இல்லை பதில் சொல்லி முடித்திருக்கலாம் ஆனா மீனாவை கஷ்டப்படுத்துற மாதிரி இப்படி பேசி இருக்கக் கூடாது தப்பு உங்க மேல தான் என்று சொல்கிறார். 

நான் என்ன தப்பா சொல்லிட்டன், உண்மைய தானே சொன்னன்.. மீனாவுக்கு நாங்க தானே நகை போட்டு கூட்டி வந்தோம் என சொல்ல, இது தான் உங்களுக்கு பிரச்சனையா என தான் போட்ட எல்லா நகையையும் கழட்டி வைக்கிறார் மீனா.

இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் முத்து என்ன நடந்துச்சு என்ன ஆச்சு என்று கேட்க, என்ன சொல்லணும் என்று மீனா கோபப்பட அண்ணாமலை உங்க அம்மாவோட வாயை பத்தி உனக்கு தெரியாதா என்று கூறுகிறார். 

அப்போ சும்மா இல்லாமல் விஜயா என்னமோ எல்லா நகையும் கழட்டி கொடுத்துட்ட மாதிரி பேசுற உன் கழுத்துல இருக்குற குண்டுமணி தாலி கூட நாங்க போட்டதுதான் என்று சொல்ல நீங்க இப்படித்தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும் என்று அதையும் மேஜையின் மீது வைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


மீனா வெறும் மஞ்சள் கயிறுடன் இருப்பதை பார்த்த அண்ணாமலை தாலியாவது எடுத்து போட்டுக்கலாமா என்று சொல்ல இனிமே என் கழுத்துல நகைனு ஒன்னு ஏறனும்னா அது என் புருஷன் சம்பாதிக்கிற பணத்தில் வாங்கியதாக தான் இருக்கணும், அப்ப யாரும் அத பரிதாபமாக சொல்ல முடியாது இல்ல என் புருஷன் பணத்தில் மட்டும் தான் எனக்கு உரிமை இருக்கு, இன்னொரு முறை யாராவது என் குடும்பத்தை பற்றியும் அப்பாவை பத்தியும் பேசினீங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார். 

பின்னாடியே வந்த முத்து நீ செஞ்சது தான் சரி. அவங்க நகை எதுவும் நமக்கு வேண்டாம். உனக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் போட்டு கழட்டி கொடுத்தது என்ன நான் லிஸ்ட் போட்டு எல்லாத்தையும் வாங்கிடலாம் என்று நோட்டையும் பேனாவையும் எடுத்து கொடுக்கிறார்.  ‌ மொத்தமா வாங்க முடியாது நாளும் ஒவ்வொன்னா பணத்தை சேர்த்து வச்சு வாங்கிடலாம் என்று முத்து சொல்ல மீனா தேவையானதை லிஸ்ட் போடுகிறார். 

அதைத் தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வரும் விஜயா ரூம் இல்லாம ஹாலுக்கு வந்துட்டேன் என்று சொல்லி வருத்தப்படுகிறார். ஆனாலும் இப்போதைக்கு நடந்த நல்ல விஷயம் ஸ்ருதி அம்மா அவளுக்கு 50 பவுன் நக போட்டது தான். அதுலயும் இந்த மீனா ஏழரையை கூட்டிட்டா என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 


Advertisement

Advertisement