• Dec 26 2024

ரோகிணிக்கு ஆப்பு வைக்க தயாரான மீனா.. மூச்சுப்பிடித்து தலைதெறிக்க ஓடிய மலேசியா மாமா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா மீனாவை அழைத்து, எல்லாம் உன்னால தான் வந்தது. உன்னால தான் எனக்கு கழுத்தில் சுழுக்கு பிடிச்சது என்று பேசுகிறார். பிறகு கிச்சனுக்கு சென்ற முத்துவும்  நக்கலாக அம்மா கூட போட்டி போட்டு ஆடி கடைசியில் அம்மாவுக்கு சுளுக்கு பிடிக்க வச்சிட்ட என்று சொல்லுகிறார். இதனால் மீனா கோவத்தில் அவருக்கு டீயும் போட்டுக் கொடுக்காமல் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து விஜயாவை படியில் படுக்க வைப்பதற்காக ரூமுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். அண்ணாமலை மீனாவை விஜயாவின்  துணைக்கு படுக்குமாறு சொல்லுகிறார். அங்கு வந்த ஸ்ருதி ஆண்டி எப்படி படியில் படுக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என நிற்கிறார். விஜயா படுத்ததும் அதனை பார்த்துவிட்டு ஸ்ருதி செல்ல, பணக்கார பைத்தியம் என ஸ்ருதியை திட்டுகிறார் விஜயா.

இதை அடுத்து அம்மாக்கு இப்படி ஐடியா ஏன் கொடுத்த என மனோஜ் ரோகிணியிடம் கேட்க, அப்ப இதுக்கு காரணம் நான் தானா என கோபப்படுகிறார் ரோகிணி . பின்பு விஜயா ரோகினையும் தன்னுடன் படுக்குமாறு அழைக்க மனோஜ் வந்து, ரோகிணியை தன்னுடன் தூங்க விடுமாறு விஜயாவிடம் சொல்ல, நீ எல்லாம் ஒரு பிள்ளையா என அவரை தள்ளி விடுகிறார். இதனால் மனோஜ் தனியாக படுத்துகிறார்.


மறுநாள் கடைக்கு வித்யா சாமி படம் வாங்கி வந்து கொடுக்க, அதுக்கு பூ வைக்க வேண்டும் என ரோகிணி மீனாவுக்கு கால் பண்ணி வர வைக்கிறார். மீனாவும் வரும் போது மலேசியா மாமாவை பார்த்து விடுகிறார். இதனை பார்த்த கரி கடைக்காரர் ஒருவரின் பைக்கில் ஓட்டமெடுக்க, மீனாவும் பின்னாலேயே செல்கிறார். ஆனால் மலேசியா மாமா எஸ்கேஎப் ஆகி விடுகிறார்.

இன்னொரு பக்கம் செல்வத்துக்கு பிரிட்ஜ் வாங்க வேண்டுமென முத்துவும் மனோஜின் கடைக்கு கிளம்பி வருகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement