• Dec 26 2024

முத்துவால் பந்தயத்தில் தோற்ற மீனா... ரோகிணிக்கு வந்த போன் கால்? மனோஜ் கேள்வி மேல் கேள்வி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மீனா பூ கட்டுபவர்களை பார்க்க வந்திருக்க, அவர்கள் தங்களது நிலையை சொல்லி  கவலைப்படுகின்றார்கள். மேலும் தமது புருஷன்மார் என்ன செய்து கொடுத்தாலும் தம்மை பாராட்டவில்லை என சொல்ல, எல்லாரையும் அப்படி சொல்லாதீங்க என் புருஷன் என்ன செஞ்சு கொடுத்தாலும் பாராட்டுவார் என்று மீனா பெருமையாக பேசுகின்றார்.

ஆனாலும் அவர்கள், நீ வேணா பெசலெட்  தோசை செய்து கொடு நல்லா இருக்கா இல்லையான்னு நீ கேட்கக் கூடாது. அவங்களா பாராட்டணும் என்று கண்டிசனோடு 50 ரூபாய் பெட்டு கட்ட, என் புருஷன நம்பி 5000 கூட பெட்டு கட்டுவேன் என்று மீனா பில்டப் கொடுகின்றார்.

இதை தொடர்ந்து மனோஜ் கலர் கலரா வாங்கி வைத்திருக்கும் சட்டைகளை விஜயா ரோகினிடம் காட்டி இனிமேல் இப்படித்தான் டிரஸ் பண்ண போறேன் என்று சொல்ல, அவர்கள் மனோஜை திட்டி விடுகின்றார்கள். ஆனாலும் என் வளர்ச்சியை பார்த்து நிறைய பேர் அதை தடுக்க முயற்சி பண்றாங்க நான் ஜோசியர் சொல்வதை தான் கேட்கப் போகின்றேன் என்று சொல்லுகிறார்.

இதை அடுத்து மீனா பெசலெட்  தோசை செய்ய முதலில் சாப்பிட்ட அண்ணாமலை ஆகா ஓகோன்னு பாராட்டுகிறார். அதன் பின்பு விஜயா இது என்ன பச்சையா இருக்கு பச்சை மிளகாய் அரைச்சி என்னை கொல்ல பாக்குறியா? என்று திட்ட அண்ணாமலை அதற்கு விளக்கம் கொடுக்க பிறகு சாப்பிட்டு பார்த்த விஜயா சாப்பிடற மாதிரி தான் இருக்கு என்று சொல்லுகின்றார்.


எல்லாரும் மீனாவை பாராட்ட , முத்து நடந்து கொண்டே சாப்பிடுகின்றார். ஒவ்வொரு முறையும் மீனாவை கூப்பிட மீனா ஆவலோடு ஓடிப் போகவும் தண்ணீர், சட்னி என என்று கேட்டு ஏமாற்றம் கொடுக்கின்றார். கடைசி வரை முத்து எதுவுமே சொல்லவில்லை இதனால் மீனா கவலைப்படுகின்றார்.

அதன் பின்பு கிரிஷ் ரோகினிக்கு போன் செய்து, எனக்கு பிறந்தநாள் வருது. நீ வருவா தானே என கேட்டு, எனக்கு கோட்டு சூட்டு வாங்கிட்டு வா.. நீ கொண்டு வார டிரஸ் தான் நான் போடுவேன் என்று சொல்ல, நான் கண்டிப்பா வருவேன் வரும்போது வாங்கிட்டு வரேன் என்று பேசிக்கொண்டு இருக்க, மனோஜ் அங்கு வந்து யாரு? எங்க வரேன்னு சொல்லுற என கேட்கின்றார். அதற்கு கிளைன்ட் வீட்ல பர்த்டே பார்ட்டி ஒன்னு அதுக்காக வரேன்னு  சொன்னதாக சொல்லி சமாளித்து கடைக்கு செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement