• Dec 26 2024

வீட்டாருக்கு இனியா சொன்ன பொய்யால் குழம்பிய பாக்கியா! கோபி கொடுத்த சப்போர்ட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பிரின்சிபல் டிஸ்மிஸ் செய்ய போவதாக சொன்ன காரணத்தினால் இனியாவும்  அவரது நண்பர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, கோபி இனியாவுக்கு போன் பண்ணி ஆறுதல் சொல்லுகின்றார். மேலும் தான் பிரின்சிபல் இடம் வந்து பேசுவதாகவும் என்ன நடந்தாலும் தனக்கு சொல்லுமாறும் சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் பழனிச்சாமி நடந்த விஷயம் தெரிஞ்சு பாக்கியாவை பார்க்க, எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என்று உங்க மேல பழிய போடாதீங்க என்று ஆறுதல் சொல்ல, பாக்கியாவும் தனக்கு அத்தையும் மாமாவும் பெரிய சப்போட்டாக இருப்பதாக சொல்கின்றார்.

அதன் பின்பு பாக்யாவுக்கு மெசேஜ் வர இனியா காலேஜ்ல இருந்து தான் இருந்துதான் மெசேஜ் வந்திருக்கு நாளைக்கு பிரின்சிபில் பார்க்க சொல்லி இருக்காங்க என்று மெசேஜ் படிக்கின்றார் .


இதைத் தொடர்ந்து ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் இனியா காலேஜுக்கு வந்து காத்திருந்து அவரை அழைத்து வருகின்றார்கள். தனக்காக கால் வலியையும் பொருட்படுத்தாமல் வந்த தாத்தா பாட்டியை பார்த்து குற்ற உணர்ச்சியில் தவிக்கின்றார் இனியா.

அதன்பின் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி மீண்டும் குழந்தை புராணத்தை தொடங்க, லைஃப்ல செட்டில் ஆன பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று எழில் சொல்ல, குழந்தை பெற்றுக்கொள்வது தானே செட்டில் ஆகிறது என்று ஈஸ்வரி திட்டுகின்றார். இதனால் அமிர்தா வருத்தப்பட ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டி அடக்குகின்றார்.

இறுதியாக காலேஜ்ல என்ன சொன்னாங்க என்று இனியாவிடம் கேட்க, எதுவும் சொல்லல்ல என்று சமாளிக்கின்றார். ஆனாலும் போலீஸ் எப்படியும் தகவல் கொடுத்து இருப்பாங்க ஒன்றுமே சொல்லலையா என்று கேட்க, இனியா பொதுவா காலேஜில் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னு சொன்னாங்க பெயர் எதையும் குறிப்பிடவில்லை என்று சமாளிக்கின்றார். இதனால் பாக்கியாவுக்கு இனியா மீது சந்தேகம் வருகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement