• Dec 26 2024

மனோஜ் விஜயாவுக்கு மரணபயத்தை காட்டிய மீனா.. சுதா செய்த தரமான காரியம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், பாட்டியோடு எல்லோரும் பேசிக் கொண்டிருக்க மீனா நகைகளை போட்டுக்கொண்டு வெளியே வருகின்றார். இதை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட, விஜயாவும் மனோஜூம் அது கவரிங் நகை என்று தெரிந்து விடுமோ என பயப்படுகிறார்கள். பாட்டி இப்பதான் லட்சணமா இருக்கிறா என்று மீனாவுக்கு வாழ்த்துகிறார்.

அதன் பின்பு மீனாவின் அம்மாவும் தங்கச்சியும் வந்து பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுகின்றார்கள். இதன்போது பாட்டி சீதாவுக்கு பொட்டு வைத்து எப்பொழுது உனக்கு கல்யாணம்? நல்ல பையனா பார்த்து கட்டிக்கோ என சொல்ல, அதற்கு இன்னும் ஒருவர் ரயிலில்  அடிபட்டு சாகணும் அப்படி என்று உடனே விஜயா வாயை போடுகிறார். இதனால் கோபப்பட்ட பாட்டி விஜயாவுக்கு எல்லார் முன்னிலையிலும் வைத்து திட்டுகிறார்.

அதன் பின்பு மீனா, சீதா படிச்சு தனக்கென்று ஒரு அடையாளத்தை எடுக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம். இல்லாட்டி ஒன்றும் இல்லாத வீட்டில் இருந்து வந்தவங்க என்று தான் பேசுவாங்க என விஜயாவை குத்தி காட்டி பேசுகிறார்.


அதன் பின்பு ஸ்ருதியின் அம்மா அங்கு வர, மீனா அவருக்கு ரோஸ் மில்க் கொடுக்குறார். இதன்போது முத்து எங்கே என கேட்க , அவர் கொஞ்சம் வேலையாய் வெளியே போய் இருப்பதாக சொல்ல , என்னதான் ஓடி ஓடி உழைச்சாலும் உன் புருஷன் உனக்கு தங்க நகை செஞ்சு போடலையா ? கவரிங் நகையை போட்டுட்டு இருக்கீங்க என கேட்க, எல்லோரும் இதைக் கேட்டு ஷாக் ஆகின்றார்கள்.

இதன்போது இல்லை இது தங்க நகை தான் என்று சொல்ல, ஸ்ருதியின் அம்மா பார்த்தாலே விளங்குது இது கவரிங் நகை தான் என்று அடித்துக் கூறுகிறார். இதன் போது பாட்டி அது தங்க நகை தான் எல்லோரும் முன்னாடியும் வைத்து இப்படித்தான் கதைப்பிங்களா என ஸ்ருதி அம்மாவுக்கு பேச, ஸ்ருதி வந்து அவங்க என்ன நகை போட்டால் உனக்கு என்ன என்று அவரை மறுபக்கம் இழுத்துச் செல்கிறார்.

இதைத்தொடர்ந்து மனோஜ் பாட்டியை கேக் வெட்டுமாறு  அழைக்க, முத்து வரட்டும் என சொல்லுகிறார். அதன்பின்பு கிப்ட்  கொடுப்போம் என சொல்லவும் அதற்கும் முத்து வரட்டும் என சொல்ல, அவன் தள்ளாடி கொண்டு தான் வருவான் என விஜயா சொல்லுகிறார். எல்லாத்துக்கும் அவனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முதலில் மனோஜ் பாட்டிக்கு கிப்ட் கொடுக்கின்றார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement