• Oct 26 2024

தேவதை போல ஜொலிக்கும் மீனாவின் தங்கச்சி.. சீரியலை விட அழகில் தூக்கலா இருக்காங்களே!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதுடன்  விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகின்றது.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் அண்மையில் தான் 500 எபிசோடுகளை கடந்து இருந்தது. இதனை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள் சிறகடிக்க ஆசை சீரியல் குடும்பத்தினர். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமான கதைகளத்துடன் மூன்று இளம் ஜோடிகளை கொண்டு இந்த சீரியல் நகர்த்தப்பட்டு வருகின்றது. குறுகிய நாட்களுக்குள்ளையே தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. சிறகடிக்க ஆசை சீரியல் நடிக்கும் கேரக்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதோடு இதில் அனைவருக்கும் கதைக்களம் அமையும் வகையில் அன்றாடம்  காணக்கூடியதாக உள்ளது.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் சங்கீதா தனது இன்ஸ்டா  பக்கத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் இந்த சீரியலில் மீனாவின் தங்கச்சியாக முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.

சங்கீதா சீரியல் நடிகையாக மட்டும் இல்லாமல் இவர் டாக்டர் படிப்பையும் முடித்தவர். அடிக்கடி ரீல்ஸ் வெளியிடுவதை  வாடிக்கையாகக் கொண்ட இவர், போட்டோ ஷூட் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். தற்பொழுது பாவாடை தாவணியில் அழகிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement