• Dec 25 2024

ஒருவரைக் காதலித்து விட்டு.. வேறொருவரை திருமணம் செய்த மீரா ஜாஸ்மின்.. இதோ பலருக்கும் தெரிந்திடாத உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவரின் உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசேப். படத்திற்காக தன் பெயரை மீரா ஜாஸ்மின் என மாற்றிக் கொண்டார். இவர் 1982-ஆம் ஆண்டு பெப்ரவரி 15-ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். அப்பா பெயர் ஜோசேப். அம்மா பெயர் எலையம்மா. 


இவருக்கு 2சகோதரிகளும் 1சகோதரனும் உண்டு.இவர்கள் மூவரும் சினிமாத் துறையிலேயே பணியாற்றி வருகின்றனர். மீரா ஜாஸ்மின் பள்ளியை முடித்ததும் BSC Geology என்ற பட்டப்படிப்பை பயில்வதற்காக 3மாதம் கல்லூரிக்கு சென்றிருக்கின்றார். அந்த நேரத்தில் தான் மலையாள படத் தயாரிப்பாளரான லோகிதா தாஸ் இவர் பிளஸ்சி என்ற உதவி இயக்குநர் மூலமாக இவரை சந்தித்திருக்கின்றார். இவர் தான் முதன் முறையாக  மீரா ஜாஸ்மினை மலையாள சினிமாவில் நடிக்க வைத்திருக்கின்றார்.


மீரா ஜாஸ்மின் படத்தில் நடிக்கணும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லையாம். இவருக்கு நன்றாகப் படித்து ஒரு டாக்டராக வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்ததாம். எதிர்பாராத விதமாகவே இவர் சினிமாவில் நுழைந்திருக்கின்றார்.

அந்தவகையில் இவரின் முதல் படம் 2002 இல் வெளியான 'சூத்திரதாரன்' என்பது தான். அதற்கு அப்புறமாக அவர் நடித்த 2ஆவது திரைப்படம் தமிழில் மாதவன் உடன் இணைந்து 'ரன்' என்ற திரைப்படம் தான். தமிழில் இவரின் முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால் இதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புக்கள் இவருக்கு வந்து குவிந்தன.


அந்தவகையில் 'பாலா, புதிய கீதை' என தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார். அத்தோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இவருக்கு சுத்தமாகவே தமிழ் தெரியாதாம். ஆனால் பின்னர் தமிழ் கற்று 'ஆய்த எழுத்து' என்ற படத்தில் சொந்தமாகவே டப்பிங் பேசி இருக்கின்றார். இவ்வாறாக தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் இவர் நடித்திருந்தாலும் அதிகளவிலான வெற்றியைக் கொடுத்தது என்றால் அது மலையாள படங்கள் தான். இப்பவும் அவர் தொடர்ந்து மலையாள படங்களில் தான் நடித்து கொண்டிருக்கின்றார்.


இவர் மியூசிக் கம்போஸரான மாண்டிலிங் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே இவர்களது காதல் பிரேக்கப் ஆகி விட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 9-ஆம் நாள் டுபாயில் வேலை செய்கின்ற ஒரு எஞ்சினியரான அனில் ஜோன் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் நடக்கும் போதே மீரா ஜாஸ்மின் 2ஆவது திருமணம் செய்வதாக கூறி பல வதந்திகளும் கிளம்பத் தொடங்கின. அதன் பின்னர் இவர்கள் இருவரும் விவாகரத்துப் பண்ணி இருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தன.


ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை கூடிக் கிடையாது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழுகிறார்களோ, பிரிந்து விட்டார்களோ என்பது கூட யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.  

Advertisement

Advertisement