• Apr 24 2026

ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்? விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண தேதி மாற்றம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஜோடிகளில் ஒருவர் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களுக்கிடையேயான நட்பு மற்றும் நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இவர்களது திருமணம் தொடர்பான செய்திகள் மீண்டும் இணையத்தை கலக்கி வருகின்றன.

தகவல்களின்படி, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வு மிகவும் ரகசியமாக, நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான் உதய்பூர் என்பது பிரமாண்ட திருமணங்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். பல பிரபலங்கள் அங்கு தங்களது திருமணத்தை நடத்தியுள்ள நிலையில், இந்த ஜோடியும் அதே பாதையை தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்வில், இருவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரபலர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திருமணத்திற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனை தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement