• Apr 13 2025

'Meme' உலகின் முடிசூடா மன்னன்.. வைகைப் புயலை புகழ்ந்து தள்ளிய பிரபல அமைச்சர்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் பின்னணி பாடகராகவும் நகைச்சுவை மன்னராகவும் திகழ்பவரே வடிவேல். இவரை சமீபத்தில் அமைச்சர் ஒருவர் சந்தித்த போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அதில் , நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை ஒரு ரசிகனாக சந்தித்ததில் எனக்கு  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராயன் கூறியுள்ளார்.


இதன் போது அவர், ஒரு நாட்டின் அமைச்சராக இருந்து கொண்டு நடிகர் வடிவேலுவை சந்தித்ததில்  எனக்கு மகிழ்ச்சியாக  உள்ளது எனக் குறிப்பிட்டமை மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதுமட்டும் இல்லாது அமைச்சர் வடிவேலுவை,  " meme உலகின் முடிசூடா மன்னன்....எங்கள் மதுரை மண்ணின் மைந்தன்...வைகைப்புயல் என்று வடிவேலுவை புகழ்ந்து தள்ளி உள்ளார். 

அத்துடன் அந்த போட்டோவில் வடிவேலு கண்ணாடி எல்லாம் போட்டு செம்ம கெத்தா அமைச்சருடன் போஸ் கொடுத்தும் உள்ளார். இந்த போட்டோ தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement