• Dec 26 2024

மோகன்லாலின் 360 ஆவது படமா? 50 படத்துக்குமேல் ஜோடியாக நடித்த அதே நடிகைதான் இந்த படத்துக்கும்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

நாம் தமிழில் ரஜனி , கமல் போன்றவர்களை அனுபவமிக்க முன்னணி நடிகர்களாக கொண்டாடுவது போன்றே மலையாளத்தில் முன்னணியாக இருக்கும் நடிகர்கள் மோகன்லால் , மம்முட்டி போன்றவர்கள் ஆவர். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன்லாலின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.


18வது வயதிலேயே நடிகராக அறுமுகமானவர் மோகன்லால் ஆவார். 1978 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான திரனோட்டம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் விஜயுடன் ஜில்லா திரைப்படத்திலும் , ராஜனியுடன் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


இந்த நிலையிலேயே இவரது 360 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தருண் மூர்த்தி இயக்கம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோபனா நடிக்க உள்ளார். மோகன்லால் மற்றும் சோபனா இணைந்து 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

Advertisement

Advertisement