• Dec 26 2024

த.வெ.க தலைவர் விஜய்க்கு எம்.பி கனிமொழி சொன்ன அறிவுரை !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் தளபதி விஜய் இன்றைய நாளில் தமிழ் திரையுலகில் போட்டி இல்லாத நாயகனாக உள்ள போதும் 69வது படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகி முழு நேர அரசியல் களத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவித்த போது திரையில் அவரை காண முடியாதே என்ற கவலைகளை விட நமக்கான தலைவனின் வருகை என்று கொண்டாடினார்கள் அவரது ரசிகர்கள்.

Vijay's CAA Stand Silences 'TVK Is BJP ...

"தமிழக வெற்றிக் கழகம்" என்ற பெயருடன் உதயமாகியிருக்கும் கட்சியின் அடுத்த கட்ட வேலைகளில் இருந்து வருகின்றனர் விஜயின் ரசிகர்களான தொண்டர்கள்.அண்மையில் கட்சியின் முதல் பொதுகூட்டத்திற்கான இடம் தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் அக் கூட்டத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

TVK - VIJAY

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய எம்.பி.கனிமொழியுடம் விஜய் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. "அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு உங்கள் அறிவுரை என்ன?" என கனிமொழியிடம் கேக்கபட்டது.

Kanimozhi defends Stalin as Karunanidhi's successor in DMK | India Today  Conclave South - India Today

அதற்கு சிரித்தவாறே பதில் சொன்ன கனிமொழி பின்வருமாறு கூறினார்; "சின்ன வயதில் இருந்தே நடிகர் விஜய்யின் குடும்பத்தோடு எனக்கு பழக்கம் உள்ளது; விஜய்யிடம் சிறந்த தெளிவும், கடின உழைப்பும் இருந்ததால் தான், திரைத்துறையில் எல்லோரும் கொண்டாடக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய இடத்தை அடைந்துள்ளார்; அதே தெளிவோடும், அதே உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்"

Advertisement

Advertisement