• Dec 25 2024

துபாயை அதிர வைத்த இசை மாஸ்ட்ரோவின் இசைக்கச்சேரி! மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்பட தொகுப்பு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான்  அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

தற்போதைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார்.


துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில்  ‘ஹூக்கும் வேர்ல்ட் டூர் – அலப்பரை கெளப்பறோம் கான்செட்ர்ட்’டை  அண்மையில் அறிவித்திருந்தார் அனிருத்.

மேலும், இந்த நிகழ்ச்சி பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இசை தாக்கங்களை கொண்டு ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் பல ஹிட் பாடல்கள் இடம் பெற இருப்பதாகவும், இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான அனிருத், ஹூக்கும் வேர்ல்ட் டூரை துபாயில் ஆரம்பித்த காட்சிகள், சமூக வலைத்தளத்தை அதிர வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்,







Advertisement

Advertisement