• Dec 25 2024

பெப்பர் ஸ்ப்ரே வாங்கச் சொன்ன முத்து.. மீனாவுக்கு தெரியவந்த உண்மை?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதி தனக்கு பின்னேரம் ஒரு பர்த்டே பார்ட்டி இருக்குது. அதற்கு நீயும் வரவேண்டும் என்று ரவியை கூப்பிடுகின்றார். ரவியும் முதலில் சரி என சொல்லுகின்றார். ஆனால் அந்த நேரத்தில் ரித்து கால் பண்ணி பின்நேரம் ஒரு ஆர்டர் இருப்பதாக சொல்கின்றார். இதனால் ஸ்ருதியை தனியாக போயிட்டு வருமாறு சொல்லி அனுப்புகின்றார்.

இன்னொரு பக்கம் மீனா பூ கொடுக்கச் செல்ல, அவர் பின்னாலே சென்ற முத்துவின் நண்பர் அவரிடம் முத்து சொல்லிக் கொடுத்தது போலவே உங்களிடம் பெயர் கேட்டது தப்பு தான். நானே உங்களுக்கு அன்பு என்று பெயர் வைத்திருக்கின்றேன் என்று சொல்லி மீனாவுடன் கதைக்கின்றார்.

இதை தொடர்ந்து அவர் போனதும் மீனா முத்துவுக்கு கால் பண்ணி தன்னை ஒருத்தன் போலோ பண்ணுவதாக சொல்லுகின்றார். இதனால் முத்து நீ உடனே பெப்பர் ஸ்ப்ரே வாங்கி வைத்துக்கொள். இனி அவன் வந்தால் சொல்லு என்று சொல்லுகின்றார்.


அதன்பின் ஸ்ருதி பர்த்டே பார்ட்டிக்கு செல்ல அங்கு ரித்துவும் ரவியும் வருகின்றார்கள். இதை பார்த்த ஸ்ருதி கோவப்படுகின்றார். மேலும் ரவியுடன் சண்டை பிடித்து விட்டு வெளியே செல்லுகின்றார். இதனால் ரவி என்ன செய்வதென்று தெரியாமல் நடுவில் குழம்பிப் போய் உள்ளார்.

இறுதியாக மீனா பார்வதி வீட்டுக்குச் சென்று பூ கொடுக்க, அங்கு பார்வதி விஜயா தன்னுடன் கதைப்பதில்லை. விஜயாவுக்கு எல்லாருமே நன்றாக அமைந்துள்ளார்கள். ஆனால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை உன்னை போல தான் ரோகிணியும் நல்ல மருமகள். தன்னுடைய நகைகளை வைத்து அந்த இரண்டு லட்சம் காசை கொடுத்தார் என்று உண்மையைச் சொல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement