• Dec 27 2024

மீனா மடியில் விழுந்து அழுத முத்து.. போலீசார் செய்த காரியம்..! படுத்த படுக்கையான விஜயா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், முத்துவுக்கு மருந்து போட்ட ஜூஸை விஜயா குடித்து விடுகிறார். இதனால் அவருக்கு வயிற்றோட்டம் ஏற்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த எல்லோரும் பதறி போயிருக்க, முத்து டாக்டரை அழைத்து வருகிறார். 

மீனா மருந்து கொடுத்த அக்காவிடம் சென்று விசாரிக்க, அவர் ஒன்றும் ஆகாது என்று சொல்ல, மீனா வீட்டுக்கு வரும்போது விஜயா படுத்த படுக்கையாக இருக்கிறார். அதன் பின்பு மீனா அவர் குடிய மறக்க வேணும் என்று மருந்து போட்டு வச்சிருந்தன். அதை எடுத்து அத்தை குடிச்சுட்டாங்க என்று சொல்ல, இதை கேட்ட விஜயா இவ என்ன சாகடிக்க பார்த்தா என கத்துகிறார். ஆனாலும் அண்ணாமலை மீனாவ ஒன்றும் சொல்ல வேண்டாம் அவர் தனது புருஷனை திருத்துவதற்கு முயற்சி எடுத்து இருக்கா என்று சொல்லுகிறார்.


இதனால் முத்து எதுவும் பேச முடியாமல் மாடியில் சென்று தனியாக இருக்க அங்கு மீனாவும் செல்கிறார். இதன் போது முத்து நீ கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த கார், நான் சவாரி செய்யும் போது ஒரு நாளும் குடிச்சதில்ல என்று மீனாவின் மடியில் விழுந்து அழுகிறார்.

இதை தொடர்ந்து முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு காரை பற்றி விசாரிக்க, அங்கிருந்த போலீசார் முத்துவிடம் வேலை வாங்குகிறார்கள். வேறு வழியின்றி முத்து அவர்களுக்கு டீ வாங்கி கொடுத்து வேலை செய்கின்றார். 

எனினும் அவரை வெளியே நிக்க சொல்லி இன்ஸ்பெக்டர் வந்த பிறகு கதைக்கலாம் என்று இழுத்தடிக்கின்றார்கள். அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டரும் வருகிறார். ஆனால் முத்துவை பார்க்காமல் நேரா ஸ்டேஷனுக்குள் செல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement