• Dec 26 2024

ஆத்திரத்தில் வீட்டை இரண்டாக்கிய முத்து! இறுதியில் ஸ்ருதி வைத்த டுவிஸ்ட்! முதல்நாளே நோஸ்கட் வாங்கிய விஜயா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என பார்ப்போம் வாங்க..

அதன்படி, மீனாவின் ரூம்க்கு வந்த விஜயா, ரூமை சுத்தம் பண்ணிட்டு வெளியே வந்துடு, அவங்களுக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு பண்ணனும் என சொல்ல, அவர் ரொம்ப டயட்டா வருவேர். அப்ப எங்க போய் அவர் தூங்க சொல்ல என கேட்க, நீ தான் சமாளிக்கனும் என சொல்லுகிறார்.

எனினும், அவர்கிட்ட ஒரு வார்த்தை கேக்கிறன் என்று போனை எடுக்க, அவன்கிட்ட இப்ப சொல்ல வேணாம் வந்ததும் சொல்லி அவன சம்மதிக்க வை இரண்டு மூணு நாளைக்கு தான் அவங்களுக்கு நல்லது நடக்கணும் இல்ல, இந்த வீட்டுக்கு முதல்ல வந்த மருமக நீ தான், நீ தான் பொறுப்பான நடந்துக்கணும் என்று சொல்லி ஒரு வழியாக மீனாவை சம்மதிக்க வைக்கிறார். 


பிறகு வீட்டுக்கு வந்த முத்து மீனாவிடம் உப்புமா மற்றும் பிளாக் டீ கேட்டுவிட்டு ரூமுக்கு செல்ல முதலிரவு காண ஏற்பாடுகளை பார்த்து முத்து தனக்காக மீனா செய்தது என நினைத்து மீனா விடம் நெருங்க, மீனா இது நமக்காக செய்தது கிடையாது, ரவி, ஸ்ருதி முதலிரவுக்காக செய்த ஏற்பாடு என்று சொல்ல கோபப்படுகிறார்.

இதை தொடர்ந்து, அவங்களால தான் அப்பா இப்படி போய்ட்டார். அவங்களுக்கு இதுதான் இல்லாத குறை எனக் குறிக்கொண்டு விஜயாவிடம் சண்டைக்கு போகிறார் முத்து.

எனினும், மீனா முத்துவை கூட்டிச்சென்றும் ஒரு வழியாக சமாதானப்படுத்த அவர் எனக்கு மொட்டமாடி இருக்கு உனக்கு கீழே ஒரு வராண்டா இருக்குல அதுதான் உன்ன நல்லா ஏமாத்துறாங்க என்று திட்டி விட்டு செல்கிறார். 

இதையடுத்து, ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வர அவர்களை வரவேற்று, சாப்பிட சொல்ல நாங்க வெளிய சாப்பிட்டோம் என சொல்லுகிறார். அதன்பின் எங்கட ரூம் ரெடியா என கேக்க, ஆமா முத்துட ரூமில்ல இனி தங்குமாறு விஜயா சொல்லுகிறார்.


அதற்குப்பின், ஸ்ருதியிடம் உங்களுக்கு இன்னைக்கு சடங்கு இருக்கு, வம்சம் விருத்தியாகணும்ல என்று பலவாறு சுற்றி வளைத்து சொல்ல முயற்சிக்கிறார் விஜயா. ஆனாலும் அவருக்கு புரியவே இல்ல.  

இறுதியாக, ரோகிணி உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணி இருக்காங்க என்று சொல்ல, அத ஏன் இவ்வளவு சீக்ரெட்டா சொல்லுறீங்க, அதுதான் ஏற்கனவே நடந்து முடிஞ்சிடுச்சே என சொல்லி சிரிக்கிறார்.

இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.  

Advertisement

Advertisement