• Dec 25 2024

''சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கல..'' திடீரென வீடியோ வெளியிட்டு ஆடியன்ஸுக்கு ஷாக் கொடுத்த முத்து?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. 

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அதில், சாதாரண குடும்பத்தின் நிகழும் வாழ்க்கைப் பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றது.

இதில் கதாநாயகன் முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெற்றி. ஆரம்பத்தில் பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் மூலம் தான் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த நிலையில், சிறகடிக்க சீரியலின் 300வது நிறைவு நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார் வெற்றி. அதில் அவர் கூறுகையில்,


உங்களுடைய சப்போர்ட் மற்றும் எல்லாவிதமான ஆதரவும்  இருந்ததால் மட்டும்தான் இவ்வளவு தூரம் சிறகடிக்க ஆசை சீரியலின் கதை வந்து இருக்கு...இந்த சீரியல் எல்லாருக்குமே பிடிச்சிருக்கு... அதுல எனக்கு சந்தோசம்.

இது எல்லாத்துக்கும் முக்கிய காரணம் டைரக்டர் சார். அப்புறம் எங்களோட  குரு சம்பத் குமார் சார். அதுக்கு அப்புறம் ஒரு பெரிய டீம் இருக்கு.. அவங்களோட கதை, விவாதம், எங்க இயக்குனர் உடைய முழு அர்ப்பணிப்பும் தான் இதுக்கு எல்லாம் காரணம்  என்று சொல்லணும்...

அவங்க எடுக்குற ஒவ்வொரு சீன்லையும் அவ்வளவு ஒரு நுணுக்கம் இருக்கும்..  வீட்ல நடக்கிற சாதாரணமான ஒரு சீனா இருந்தாலும் சரி, சண்டையா இருந்தாலும் சரி, ஒவ்வொரு கப்பில நடக்கிற ஒரு விஷயமா இருந்தாலும் சரி, எல்லாத்துக்குமே  ரொம்ப நுணுக்கமாக சொல்லிக் கொடுத்து இந்த சீரியல இவ்வளவு தூரம் கொண்டு வந்து இருகாங்க.

சிறகடிக்க ஆசை சீரியல் ஆரம்பிச்சு இன்னைக்கு இது 300 எபிசோடு சந்தோஷமா கடந்து இருக்கு. இன்னும் கதை சுவாரஸ்யமாக இருக்கு..  எல்லா வகையான ஆடியன்ஸுக்குமே ரொம்ப பெரிய தேங்க்ஸ்..


இந்த சீரியல நீங்க பார்த்து ரசிச்சதுனால மட்டுமில்ல, ரெகுலரா நீங்க பாக்குறதுனால தான் இன்னிக்கு இந்த சீரியல் மக்கள் மத்தில அவ்வளவு ஒரு வரவேற்பு பெற்று இருக்கு.

எனக்கு நிறைய மெசேஜ் வந்திருக்கு... அவங்க எல்லாருக்கும்  தனியா ரெஸ்பான்ஸ் பண்ண முடியவில்லை.. லாஸ்ட் டைம் என்னோட பிறந்த நாளைக்காக தான் ஃபர்ஸ்ட் டைம் வந்து நீங்க நிறைய பேர் எனக்கு விஷ் பண்ணி இருந்தீங்க... அன்னைக்கு நான் அக்செப்ட் பண்ணவங்களுக்கு இன்னைக்கு வரைக்கும் என்னால சரியா ரெஸ்பான்ஸ் பண்ண முடியல.. அதுக்கு சரியான நேரம் அமைய மாட்டேங்குது வேற ஒன்னும் இல்ல...ரொம்ப சாரி...

நீங்க எங்களுக்காக இவ்ளோ பண்ணும் போது நான் உங்களுக்காக இதை பண்ணலைனா எப்படி? அதனால தான் வேற ஒன்னும் இல்ல...  அதுக்கான நேரம் கிடைச்சுச்சுனா டேஃபனட்டா நம்ம ஒரு விஷயத்தை செஞ்சுடுவோம் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement