• Jun 06 2026

ஏலம் முடியும் தருவாயில் முத்துவின் அதிரடி என்ட்ரி.! தலைகுனிந்த சிந்தாமணி! டுடே எபிசோட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவின் பைனான்சியர் தனது டிரைவரிடம்தான் பணம் இருப்பதாகவும், அவர் தற்போது டிராபிக் போலீசாரிடம் சிக்கியிருப்பதாகவும் கூறுகிறார். இதையடுத்து, அங்கேயே சென்று அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று முத்து அவசர அவசரமாக செல்கிறான்.

அதன்படி, முத்து அவரிடம் சென்று பணத்தை வாங்கிக் கொண்டு செல்லும் வழியில், பைக்கில் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிடுகிறது. அந்த நேரத்தில் ஒருவர் பெட்ரோல் கொண்டு வர, அதைப் பயன்படுத்தி பைக்கை சரிசெய்துவிட்டு மீண்டும் செல்கிறான்.

இதற்கிடையில், சிந்தாமணி வீட்டை கைப்பற்றப் போகிறோம் என்ற உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். அப்போது அண்ணாமலை அங்கு வர, "நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? இதையெல்லாம் பார்த்து கவலைப்படப் போகிறீர்கள்" என்று ஏளனமாக பேசுகிறார்.


மேலும், முத்து வர தாமதமானதால் ஏலத்தை ஆரம்பிக்கின்றனர். இறுதியில் ஏலம் முடியும் தருவாயில் முத்து வந்து பணத்தை கொட்டுகிறான். இதைப் பார்த்து சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும், "28 லட்சம் ரூபாய்தான் இருக்கிறது, மீதிப் பணம் எங்கே?" என்று கேள்வி கேட்கிறார்.

ஆனால், முத்து மீதமுள்ள 10 லட்சம் ரூபாயையும் கொடுத்து விடுகிறான். இதனால் இந்தப் பணம் எப்படி கிடைத்தது என்று யோசித்துக் கொண்டிருக்கும் சிந்தாமணியிடம், மீனா நடந்த விஷயங்களை கூறுகிறார்.

இறுதியில், வீட்டை மீட்பதற்காக முத்து மொத்தப் பணத்தையும் கட்டி விடுகிறான். இதனால் அங்கு வந்த அதிகாரியிடம் முத்து, மீனா மற்றும் அண்ணாமலை ஆகியோர் அந்த வீட்டை மீண்டும் தங்களுக்கே வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். அதன்படி, அவர்கள் முழுப் பணத்தையும் கட்டியதால் அந்த வீடு மீண்டும் அவர்களுக்கே கிடைக்கிறது. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement