• Dec 26 2024

என்ட கேரக்டர் சரியில்லை, எல்லாரும் திட்டுறாங்க... சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த கோபி! ஈஸ்வரி பேட்டி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் சதீஷ்.

இவர் தனது படிப்பிற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர்.


இந்த நிலையில்,  பாக்கியலட்சுமி  சீரியலில் ஈஸ்வரி  கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பேட்டியொன்று கொடுத்துள்ளார். அதில் கோபி பற்றி சில தகவல்களை கூறியுள்ளார், அதன்படி அவர் கூறுகையில்,


பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென கோபி  விலகுவதாக கூறப்பட்டது. அதைப்பற்றி ஈஸ்வரிடம் கேட்டபோது, எனக்கு தெரியல. நான் இந்த சோசியல் மீடியால பார்ப்பதெல்லாம் குறைவு. எனக்கு அந்த அளவுக்கு போலலோவெர்ஸ் கிடையாது. ஆனாலும் விஷயம் தெரிந்த போது நான் அவரிடம் கேட்டேன். அதற்கு இல்லம்மா எல்லாரும் என்ன திட்டறாங்க.. அந்த கேரக்டர் சரியில்லை என்று சொல்லுறாங்க. அதனால தான் நான் ரொம்ப பீல் பண்ணினேன் என்று சொன்னார்.

ஆனாலும் நான் உங்க கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கு என்று சொன்னேன். அதுபோலவே அவர் சில டைம்களில் காமெடி பண்ணுவார் சில டைம் கோவிப்பார். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். உண்மையாகவே அவருக்கு இந்த சீரியலில் நல்ல கேரக்டர் என்று சொல்லி உள்ளார். மேலும் அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதற்கு நாங்களும் விட மாட்டோம் என கூறியுள்ளார் ஈஸ்வரி.



 

Advertisement

Advertisement