• May 28 2026

“மகளே என் மருமகளே” – ஜீ தமிழ் சீரியலின் காப்பியா? ஆதாரத்துடன் புட்டு வைத்த ரசிகர்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “மகளே என் மருமகளே” தொடர் 162 நாட்களுடன் நிறைவடைந்தது. ஹரிஸ் ஆதித்யா இயக்கிய இந்த தொடர் சுமார் 6 மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. 

ரேஷ்மா பசுபுலேட்டி, வர்ஷினி சுரேஷ் மற்றும் அவினாஷ் நடித்த இந்த தொடர், மாமியார்-மருமகள் உறவின் அன்பை மையமாக கொண்டது. இறுதியில், முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இணையும் காட்சியுடன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பானது.

இந்நிலையில், “மகளே என் மருமகளே” தொடர், ஜீ தமிழில் ஒளிபரப்பான “செம்பருத்தி” சீரியலின் காப்பி என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரு தொடர்களிலும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அதன்படி, செம்பருத்தி தொடரில் கதாநாயகி, கதாநாயகனை சின்னையா என்று அழைத்து, பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதும், அவர் அந்த வீட்டின் வாரிசு என்பது தெரியவருவதும் போன்ற கதை அமைப்பு இருந்தது. 


அதேபோன்று, இந்த தொடரிலும் இதேபோன்ற கதை அம்சங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும், இரு தொடர்களிலும் மாமியார் கதாபாத்திரங்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக சின்னத்திரை ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement