• Sep 17 2026

என் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது.. – குழந்தை பிறப்பு குறித்து சமந்தா ஓபன் டாக்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா ரூத் பிரபு. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில், குழந்தை பிறப்பு மற்றும் தாய்மை குறித்து சமந்தா தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, “குழந்தை பிறப்பு ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும் என்று பலரும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அந்த வாழ்க்கை முறை மாற்றத்தை எதிர்கொள்ள நான் மனதளவில் முழுமையாகத் தயாராகிவிட்டேன்...” எனத்  தெரிவித்துள்ளார்.


தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சமந்தா பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தனது வாழ்க்கையில் வரவிருக்கும் புதிய பொறுப்புகளை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக அவர் கூறியிருப்பது பலரிடமும் பேசுபொருளாகியுள்ளது.

சமந்தாவின் இந்தப் பேச்சு தாய்மை குறித்த அவரது எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சமீப காலமாகவே நடிகை சமந்தா தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவரது இந்தக் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

Advertisement

Advertisement