• Jul 21 2026

‘நச்சிந்தி மச்சானே’ பாடல் வெளியீடு… மகுடம் படத்துக்கு கூடும் ஹைப்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மகுடம்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்தப் படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த படம், பின்னர் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் நடிகர் விஷால் படத்தின் இயக்கப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கதை ரவி அரசு என்றும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் என்றும் குறிப்பிடப்பட்டது.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் 17 இரவுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் விஷால் வெளியிட்ட மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


மேலும், சமீபத்தில் ‘மகுடம்’ படத்தின் டீசர் மற்றும் ‘ரைஸ் ஆப் லிங்கா’ எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. 

இந்த நிலையில், தற்போது ‘நச்சிந்தி மச்சானே’ பாடலும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை மங்லி மற்றும் வேல்முருகன் இணைந்து பாடியுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நடித்த மூன்று வேடங்களுக்கான ஷூட்டிங்கும் முடிவடைந்ததாகவும் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.

வரும் ஜூலை மாதம் ‘மகுடம்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement