• Dec 25 2024

’காதலர் தினத்தில்’ லவ்வை புரபோஸ் செய்த நாக சைதன்யா.. காதலி இந்த நடிகையா? வைரல் வீடியோ..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர்  நாக சைதன்யா தனது மனைவி நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் மறுமணம் செய்ய போவதாகவும் அவர் ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாக இல்லாமல் சமூக வலைதளங்களில் கிசுகிசுவாகவே இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர்  நாக சைதன்யா இன்றைய காதலர் தினத்தில் தனது லவ்வை புரபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் நடிகர்  நாக சைதன்யா காதலித்து வருவதாக கூறப்பட்ட நடிகைக்கு இந்த புரபோஸ் இல்லாமல் நடிகை சாய் பல்லவிக்கு இருந்தது தான் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

மேலும் இது உண்மையான நிஜ வாழ்க்கை புரபோஸ் இல்லை என்பதும் ஒரு திரைப்படத்திற்காக சாய் பல்லவிக்கு லவ் புரபோஸ் செய்யும் வீடியோவை காதலர் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர்  நாக சைதன்யா மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகிய இருவரும் ’தண்டேல்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் வீடியோவில் தான் சாய்பல்லவிக்கு  நாக சைதன்யா லவ்வை புரபோஸ் செய்வது போல் கூறி உள்ளார்.

 இந்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் உண்மையாகவே இருவரும் காதலிப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே சாய் பல்லவி மற்றும்  நாக சைதன்யா ஆகிய  இருவரும் ’லவ் ஸ்டோரி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் என்பதும் அப்போது இருவருக்கும் காதல் என்று கிசுகிசு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement