• Dec 25 2024

பாரம்பரிய உடையில் நாக சைதன்யா சோபிதா திருமண போட்டோஸ்..!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் நேற்றைய தினம் படு கோலாகலமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பல நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள்.

நாக சைதன்யாவின் தந்தையும் நடிகரும் ஆன நாகார்ஜுனா மணமக்களை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் அவர்களுடைய திருமண புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் நாக அர்ஜுன கூறுகையில்,  இந்த அழகான அற்புதத்தை இருவரும் ஒன்றாக தொடங்குவதை பார்ப்பது எனக்கு உணர்ச்சிகரமாக உள்ளது. 


எனவே அன்பான சாய்க்கு வாழ்த்துக்கள். சோபிதா நீங்கள் ஏற்கனவே எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்தீர்கள் என தெரிவித்துள்ளார்.

தமது குடும்ப பாரம்பரியத்தை வகையில் நாத சைதன்யாவின் திருமணம் பாரம்பரிய உடையில் தனது தாத்தா  அக்கினேனி நாகேஸ்வர ராவை கௌரவித்தார் . ஆந்திரா பிரதேசத்தின் பாரம்பரிய உடையில் தெலுங்கு கலாச்சார மற்றும் அவரது தாத்தாவின் சின்னமான பாணியை சைதன்யா மதிக்கிறார் என்பதை பிரதிபலிக்கின்றது. தற்போது இவர்களுடைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement