• Sep 17 2026

பெண்கள் மட்டும் ஏன் தாலி அணியவேண்டும்.? சர்ச்சையைக் கிளப்பிய நமிதாவின் பேச்சு.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

திருமணம் முடிந்தவுடன் பெண்கள் கட்டாயம் தாலி அணிய வேண்டும் என்ற நடைமுறை குறித்து நடிகை நமிதா பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

பெண்களின் திருமண அடையாளமாக தாலி கருதப்பட்டு வரும் நிலையில், அது கட்டாயமான ஒன்றா என்ற கேள்வியையும் நமிதா எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “திருமணமானதுமே கண்டிப்பாக பெண்கள் தான் தாலி அணிய வேண்டும் என பகவத் கீதையில் எழுதப்பட்டிருக்கிறதா? இந்த விதிமுறைகள் ஏதேனும் வேதங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டிருக்கிறதா? நிச்சயம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பெண்களின் வாழ்க்கையைச் சுற்றி பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் சமூகம் உருவாக்கி வைத்துள்ளதாகவும், அவை காலப்போக்கில் பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருவதாகவும் நமிதா தெரிவித்துள்ளார்.

“பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? ஆண்களுக்கு ஏன் இதுபோன்ற எந்த கட்டுப்பாடும் இல்லை?” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

நமிதாவின் இந்தக் கருத்து தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement